Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பே‌ச்சுவா‌ர்‌‌த்தை தோ‌ல்‌வி: எ‌ன்.எ‌ல்.‌சி. ஊ‌ழிய‌ர்க‌ள் 3வது நாளாக வேலை ‌நிறு‌த்த‌ம்!

Webdunia
திங்கள், 31 மார்ச் 2008 (11:34 IST)
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் நிர்வாகத்துடன் 3-வது நாளாக நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால் அவர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

நெய்வேலி என்.எல்.சி.யில் பணி புரியும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கினர். இதைத்தொடர்ந்து அன்று மாலை நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

எனவே நேற்று 2-வது நாள் போராட்டம் நடந்தது. மாலையில் சென்னை உதவி தொழிலாளர் நல ஆணையாளர் தர்மராஜ் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் முதுநிலை மேலாளர் கண்ணன், ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலாளர் சேகர், நெய்வேலி ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் குப்புசாமி, ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் உக்கிரவேல், பொதுச்செயலாளர் வெங்கடேசன், பிரசார செயலாளர் ரமேஷ்குமார், அலுவலக செயலாளர் கணேசன், ஜீவா ஒப்பந்த சங்க பொருளாளர் இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, 'ஒப்பந்த தொழிலாளர்கள் முதலில் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை கை விட்டு பணிக்கு திரும்ப வேண்டும். அதன் பின்பே அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்' என நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் சுமார் 45 நிமிடம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை.

அதை தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று 3வது நாளாள வேலை ‌நிறு‌த்த‌ம் ‌நீடி‌த்து வரு‌கிறது. மாலை 6 மணிக்கு மெயின் பஜாரில் பொதுக்கூட்டம் நடத்த‌ப்ப‌டு‌கிறது. நாளை (1ஆ‌ம் தே‌தி) அசோகத்தூண் முன்பு 5 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நடத்த‌ப்படு‌கிறது. 2ஆ‌ம் தேதி முதல் 7ஆ‌ம் தேதி வரை நெய்வேலி தொழிற்பகுதிகள் முன்பு மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments