Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லை பெரியாறு அணையை திறக்க இல.கணேசன் கோரிக்கை!

Webdunia
சனி, 29 மார்ச் 2008 (15:50 IST)
விவசா‌ய ‌நிபுண‌ர்க‌ளி‌ன் ஆலோசனை பெ‌ற்று மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு, வைகை அணைகளை மு‌ன்னதாக த‌மிழக அரசு ‌திற‌‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று த‌மிழக பா.ஜ.க. தலைவ‌ர் இல.கணேச‌ன் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து தமிழக ப ா.ஜ.க தலைவர் இல.கணேசன் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில ், காலம் தவறிப் பெய்த தொடர் மழையின் காரணமாக வைக ை, முல்லைப் பெரியாறு அணைகள் நிரம்பி விட்டன. நீர்பிடிப்பு தேவையான அளவு உள்ளதால், வைகை மற்றும் முல்லைப் பெரியாறு அணைகளை உரிய காலத்திற்கு முன்னதாக அதாவது 30 நாட்கள் அல்லது 15 நாட்கள் முன்னதாகக் திறக்கலாம்.

அவ்வாறு செய்தால் 2008-ம் ஆண்டு குறுவை அறுவடை, வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்னரே அதாவது புரட்டாசி முதல் வாரத்திலேயே முடிந்துவிட பெருமளவு வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் விளைவிக்கும் 2008-ம் ஆண்டு குறுவை வெள்ளாமையாவது விவசாயிகளின் வீடுகளுக்கு வந்து சேருவதற்கான வாய்ப்பு உருவாகும்.

இது குறித்து விவாதிக்க வருவாய்த்துறையின் மூத்த அதிகாரிகள், பொதுப்பணித் துறையின் மூத்த பொறியாளர்கள் வேளாண்மைத் துறையின் மூத்த அதிகாரிகள், வேளாண் கல்லூரி விவசாய நிபுணர்கள ், விவசாயிகள் சங்கத் தலைவர்கள், பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய கூட்டத்தை த‌மிழக அரசு விரைவில் கூ‌ட்ட வே‌ண்டு‌ம் எ‌ன்று இல.கணேச‌ன் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments