Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேன‌‌க்க‌ல்: கர்நாடகா எதிர்ப்பை மத்திய அரசு தடுக்க வேண்டும்!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (12:42 IST)
ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடிந‌ீ‌ர் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌தி‌‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து வரு‌ம் க‌ர்நாடகாவை ம‌த்‌திய அரசு தடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இ‌ன்று ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

த‌‌மிழக சட் ட‌ ப ் பேரவை‌யி‌ல ் கேள்வி நேரம் முடிந்ததும் உ‌‌ள்ளா‌ட்‌சி‌த்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இ‌ன்று ஒகேனக்கல் குடிநீர் திட்டம் குறித்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் கூறி இருப்பதாவது:

தமிழகத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மக்களின் குடிநீர்த் தேவை‌க்கு ஒகேன‌‌க்க‌ல் பகு‌திக‌ளி‌ல் காவேரி நீரை ஆதாரமாகக் கொண்டு குடி‌‌நீ‌ர் வழ‌‌ங்கு‌ம் ‌தி‌ட்ட‌ம் நீண்ட காலமாகவே பரிசீலனையில் இருந்து வந்துள்ளது. மத்திய அரசும், இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஆதாரங்களை வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுத் தருவதில் தமிழகத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் இத்திட்டத்திற்கு அரசியல் நோக்கத்தோடு திடீரென எதிர்ப்பு தெரிவித்து வருவது நமக்கு அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் அளிக்கக் கூடியதாக உள்ளது. இக்கூட்டுக் குடிநீர்த் திட்டம் தமிழ்நாடு எல்லைக்குள் ஓடிக் கொண்டிருக்கும் காவிரி நீரை எடுத்து வந்து தண்ணீர்த் தேவையினால் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு வழங்குவதற்கான திட்டமேயாகும். இத்திட்டத்தால், கர்நாடக மாநிலத்திற்கு எவ்விதமான குந்தகமோ, பாதிப்போ இல்லை.

மேலும், காவிரி ஆற்றைக் குடிநீர் ஆதாரமாகக் கொண்டு, மாநிலத் தலைநகரான பெங்களூரு குடிநீர்த் திட்டத்தைப் பல்வேறு கட்டமாகக் கர்நாடக அரசு செயல்படுத்தி வருகிறது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்குக் கர்நாடகம் எதிர்ப்பு தெரிவிப்பது, இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் எதிரானது.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு கர்நாடகம் எதிர்ப்பு தெரிவிப்பதைப்பற்றி பிரதமர் மன்மோகன்சிங்க்கு முதலமைச்சர் கருணா‌நி‌தி எழு‌தியுள்ள கடிதத்தில், உண்மை நிலைகளை விளக்கி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கர்நாடக அரசு எவ்விதத் தடையும் ஏற்படுத்தாதிருக்க அறிவுறுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும், உதவியையும் தமிழக அரசிற்கு வழங்க வேண்டும். கர்நாடக அரசு கடைப்பிடித்து வரும் எதிர்ப்புப் போக்கினைத்தடுத்து நிறுத்திட ஆவன அனைத்தும் செய்திட வேண்டுமென்றும் இந்தப் பேரவை மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments