Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓகேன‌‌க்க‌ல்‌லி‌ல் அ.இ.அ.‌தி.மு.க. நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (12:06 IST)
'' ஓகேனக்கல்லில் உள்ள பகுதிகள் மீது தேவையில்லாமல் உரிமை கொண்டாடும் கன்ன ட அமைப்பினருக்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு அ. இ.அ. த ி. ம ு. க சார்பில ் நாளை கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடத்தப்படும ்'' என்ற ு அக்கட்சியின ் பொதுச ் செயலாளர ் ஜெயலலித ா அறிவித்துள்ளார ்.

இத ு தொடர்பா க அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா இன்று வெளியிட்டுள் ள அறிக்க ை‌யி‌ல், காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சனைகளில் தமிழகத்தின் உரிமைகளை கருணாநிதி தட்டிக் கேட்காமல் விட்டுக் கொடுத்ததன் விளைவாக பல்வேறு புதுப்புது பிரச்சனைகளை அண்டை மாநிலங்கள் கையில் எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டன.

தேசிய உணர்வு இல்லாத கன்னட அமைப்புகள்தான் இதுபோன்ற குறுகிய மனப்பான்மையுடன் தேவையில்லாமல் பிரச்சினைகளை உருவாக்குகின்றன என்றால் தேசியக் கட்சிகளும் இந்த விஷயத்தில் உண்மை நிலையை எடுத்துரைக்காமல் தமிழகத்திற்கு எதிரான நட வடிக்கைகளில் ஈடுபடுவது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

கர்நாட க மாநி ல முன்னாள ் முதலமைச்சர ் எடியூரப்ப ா, ஓகேனக்கல ் பகுதிக்க ு சென்ற ு எல்லைப்பிரச்சன ை குறித்த ு இர ு மாநி ல அரசுகளும ் சர்வ ே செய் த பின்னர ே ஓகேனக்கல ் கூட்ட ு குடிநீர ் திட்டத்த ை துவக் க வேண்டும ் என் ற அளவில ் பேசிவிட்ட ு சென்றிருக்கிறார ்.

ஓகேனக்கல்லில் உள்ள பகுதிகள் மீது தேவையில்லாமல் உரிமை கொண்டாடும் கன்னட அமைப்பினருக்கும், கர்நாடக அரசியல் கட்சிக ளுக்கும் தகுந்த பதிலடி கொடுக்காமல் வாய்மூடி மவுனியாக இருக்கும் தி.மு.க. அரசை கண்டித்தும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான ஓகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கழகங்களின் சார்பில் நாளை (27ஆ‌ம் தே‌தி) காலை 10 மணி அளவில் ஓகேனக்கல்லில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments