Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை 10‌ம் வகு‌ப்பு தேர்வு துவ‌க்க‌ம்: 8.5 லட்சம் மாணவ‌ர்க‌ள் எழுதுகிறார்கள்!

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (09:51 IST)
தமி ழகம், புது‌ச்சே‌ரி‌யி‌ல் 10ஆ‌ம் வகு‌ப்பு பொது‌‌த் தே‌ர்வு நாளை தொட‌ங்கு‌கிறது. இ‌‌த்தே‌ர்வை 8.5 ல‌ட்ச‌ம் மாணவ- மாணவிகள் எழுத ு‌கிறா‌ர்க‌ள்.

த‌மிழக‌‌ம், புது‌ச்சே‌ரி‌‌யி‌ல் 10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வு நாளை தொடங்குகிறது. மாணவ-மாணவிகள் மட்டும் 7 லட்சத்து 99 ஆயிரத்து 980 பேர் எழுதுகிறார்கள். அவர்களில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 619 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 2 ஆயிரத்து 361 பேர் மாணவிகள்.

மேலும் தனித்தேர்வர்கள் எழுதுகிறார்கள். மொத்தத்தில் 8 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

இவர்கள் தேர்வு எழுதுவதற்கு 1,700 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் பாதுகாப்பு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க, கண்காணிக்க 6 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வினாக்கள் மிகவும் பாதுகாப்பாக ரகசியமாக வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த தேர்விலும் மாணவர்கள் வினாத்தாளை வாசிக்க 10 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படும். அது வாசித்து முடிந்தவுடன் 10.10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்படும். பகல் 12.40 மணிக்கு தேர்வு முடிவடைகிறது.

தேர்வை சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தலைமையில் செய்யப்பட்டுவருகிறது.

தேர்வு கால அட்டவணை :

மார்ச் 27 ஆ‌ம் தேதி தமிழ் முதல் தாள்

28 ஆ‌ம் தேதி தமிழ் 2-வது தாள்

31 ஆ‌ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்

ஏப்ரல் 1 ஆ‌ம் தேதி ஆங்கிலம் 2-வது தாள்

4 ஆ‌ம் தேதி கணிதம்

8 ஆ‌ம் தேதி அறிவியல்

10 ஆ‌ம் தேதி சமூக அறிவியல்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments