Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவானிசாகர் வனப்பகுதியில் வெளிமான் கணக்கெடுப்பு

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
சனி, 22 மார்ச் 2008 (14:17 IST)
பவானிசாகர் வனப்பகுதியில் வெளிமான் கணக்கெடுப்பு முதன்முறையாக நடத்தப்பட்டது.

webdunia photoWD
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனக்கோட்டத்திற்குட்பட்ட பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள வெளிமான்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

ஈரோடு வனப்பாதுகாவலர் பி.துரைராசு, கோவை வனப்பாதுகாவலர் ஆர்.கண்ணன் ஆகியோர் உத்திரவின்படி சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி எஸ்.இராமசுப்பிரமணியம், நீலகிரி வடக்கு வனக்கோட்ட மாவட்ட வனஅதிகாரி எம்.இக்பால்பாஷா ஆகியோரின் மேற்பார்வையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சுருளைகொம்புமான் என்று அழைக்கப்படும் இந்த வெளிமான் அழிந்து வரும் வனவிலங்குகள் பட்டியலில் உள்ளதால் இந்த மான் முதல் வகுப்பு வனவிலங்காக கருதப்படுகிறது.

பெங்களூர் இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகம் மற்றும் புது டில்லி இந்திய வனவிலங்கு அறக்கட்டளை ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் பவானிசாகர் வனப்பகுதிக்குட்பட்ட மாயாறு ஆற்றுப்படுகை மற்றும் தெங்குமரஹடா வனப்பகுதியில் கணக்கெடுக்கப்பட்டது.

இந்த வெளிமான் தமிழகத்தில் கோடிக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் மட்டும் அதிகமாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அதையடுத்து இப்பகுதியில் மட்டுமே இந்த மான் காணப்படுகிறது.

webdunia photoWD
இந்தியாவிலேயே முன்முதலில் உயிற்சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டது நீலகிரி மண்டலமாகும். இதன் மொத்த பரப்பளவு 5540 ச.கி.மீ. இந்த வெளி மான் நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சீகூர் மற்றும் நீலகிரி கிழக்கு வனசரகத்திலும் காணப்படுகிறது.

இந்த மானின் எண்ணிக்கையை கண்டறிய முதன்முதலில் தற்போதுதான் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments