Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் வரி இல்லாத நிதிநிலை அறிக்கை!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (18:29 IST)
பெரும்பாலா ன பொருட்களுக்க ு வர ி விலக்கும ், வர ி விதிப்பும ் அளித்த ு, இந்தாண்ட ு வர ி இல்லா த நிதிநில ை அறிக்கைய ை சட்டப்பேரவையில ் நித ி அமைச்சர ் க.அ‌ ன்பழகன ் தாக்கல ் செய்துள்ளார ்.

அரசு சார்பில் நடத்தப்பட்ட வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில ், விடுக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், மதிப்புக்கூட்டு வரி விதிப்பில் பல்வேற ு சலுகைகள ை தமிழ க அரச ு அறிவித்துள்ளத ு. இந் த வரிவிலக்கு, வரிக்குறைப்பு சலுகைகள் 1.4.2008-லிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு அறிவித்துள்ள வரிவிலக்கு சலுகைகள்:

காகித உறை, குறிப்பிட்ட விற்றுமுதல் வரை மஞ்சள், மிளகாய், தனியா வகைகள், அதே விற்றுமுதல் நிபந்தனையுடன் மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொட ி, தனியாப்பொட ி, தேங்காய் துருவல், தேங்காய்ப் பால ், தேங்காய்ப் பால் பொடி, அடைக்கப்பட்ட இளநீர், வெளிமாநிலத்திற்கு விற்கப்படும் வெல்லம், காட்டாமணக்கு வித ை, எண்ணெய், இரப்பர் பூச்சுள்ள நெசவுத் துணிகள் ஆ‌கியவ‌ற்‌றி‌‌ற்கு வ‌ரி‌வில‌க்கு.

பெரும்பாலான தாவர எண்ணெய்களுக்கும், அனைத்து வகையான சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்களுக்கும் விற்றுமுதல் நிபந்தனையுடன் வரிவிலக்கு.

சோயா எண்ணெய்க்கு நிபந்தனையுடன் வரிவிலக்கு.

திருமணத்தின் போது பெண்கள் அணியும் தங்கத்திலான தாலிக்கு 8 கிராம் வரை வரிவிலக்கு உள்ளது.

இஸ்லாமி ய, கிறித்தவ மதத்தினர் மங்கல நாணாக பயன்படுத்துகின்ற கருகமணி, சிலுவை போன்றவற்றிற்கும், தற்பொழுது நடைமுறையிலுள்ள 8 கிராம் வரை வரிவிலக்க ு உள்ளத ு.

இந் த எடை வரம்ப ு ஏதுமின்ற ி முழ ு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளத ு.

சித்த மருத்துவத்தை ஊக்குவிக்கும ் வகையில், அனைத்து சித்த மருந்துகளுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளத ு.

நிபந்தனையுடன் கூடிய வரிவிலக்குப் பொருட்களான சமையல் எண்ணெய், பருப்ப ு, பயறு வகைகள், மஞ்சள், மிளகாய், தனியா ஆகிய பொருட்களை உணவகங்கள் கொள்முதல் செய்யும்போது, தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரிச் சட்டத்தின் பிரிவு 12-ன் கீழ் கொள்முதல் வரி செலுத்த வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க, இப்பொருட்களுக்கு கொள்முதல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளத ு.

வரிகுறைப்பு சலுகைகள ்:

வறுக்காத சீவலுக்கும் 12.5 விழுக்காட்டிலிருந்து, 4 விழுக்காடாக வரி குறைப்ப ு.

மொசைக் சில்லுகளுக்கும் 4 விழுக்காடாக வரி குறைப்ப ு.

காகித அட்டையினால் தயாரிக்கப்பட்ட கோப்பு அட்டைகளுக்கு 12.5 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக வரி குறைப்ப ு.

பிளாஸ்டிக்கிலான படச் சட்டங்களுக்கு வரியைக் குறைத்து 4 விழுக்காடு வரிக்குட்படும் பிளாஸ்டிக் பொருட்களுடன் சேர்ப்ப ு.

ஏற்கனவே பொது விற்பனைவரி அல்லது மதிப்புக்கூட்டு வரி செலுத்தி வாங்கி, தமிழ்நாட்டில் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ ், பதிவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மீண்டும் விற்பனை செய்யும்போது விதிக்கப்படும் வரி, 12.5 விழுக்காட்டிலிருந்து உள்ளீட்டு வரி வரவு இல்லாமல் 4 விழுக்காடாக குறைப்ப ு.

கட்டுமானப் பணிகளுக்கு வாடகைக்கு விடப்படும் பொருட்களுக்கான வாடகை மீது விதிக்கப்படும் 12.5 விழுக்காடு வரி விகிதத்தைக் குறைத்து உள்ளீட்டு வரி வரவு இல்லாமல் 4 விழுக்காடாக வரி குறைப்ப ு.

மின் உற்பத்தி இயந்திரங்கள் மீது விதிக்கப்படும் வரி 4 விழுக்காடாகக் குறைப்ப ு.

நட்சத்திர தகுதி பெறாத உணவகங்கள் விற்பனை செய்யும் சின்னமிட்ட பொருட்கள் மீதான வரியும் 2 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளத ு. அதே சமயம் அப்பொருள்களின் கொள்முதலுக்கு உள்ளீட்டு வரிவரவு வைத்துக் கொள்ள இயலாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளத ு.

மதிப்புக் கூட்டு வரி விதிப்பை மேலும் எளிமைப்படுத்தவும், முறைப்படுத்தவும் தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் 2006 மற்றும ் அதன் விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்ப ட உள்ளத ு. இது தொடர்பான விவரங்கள் வணிகவரித்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட உள்ளத ு.

கடந் த 2007 ஜனவர ி 1- ம ் தேதி முதல் மதிப்புக் கூட்டு வரி செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டத்தின் கீழ ் முந்தைய ஆண்டுகளில் விதிக்கப்பட்ட வரி, பல காரணங்களினால் வணிகர்களால் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.

2001-2002 ஆம் ஆண்டு வரையுள்ள காலத்திற்கான வரி நிலுவைகளைத் தீர்க்கும் வகையில், ‘ஒரேமுறை தீர்வுத் திட்டம்’வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படுகிறத ு. இத்திட்டத்தின் விவரங்கள் வணிக வரி மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்ப ட உள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

பிப்ரவரியில் தொடங்குகிறது கோடை.. 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என தகவல்..!

தவெகவின் கொள்கை தலைவருக்கு இன்று நினைவு நாள்.. விஜய் மரியாதை..!

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

Show comments