Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழ‌ர்க‌ளி‌ன் க‌ண்‌‌ணீ‌ர் துடை‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம்: வைகோ!

Webdunia
ஞாயிறு, 16 மார்ச் 2008 (12:40 IST)
'' உலகெங்கும் உள்ள தமிழர்களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கொள ்கை எ‌ன்று ம‌.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தனர். அ‌ப்போது அவ‌ர் பேசுகைய‌ி‌ல், 14 ஆண்டுகள் கட்சியை நடத்தி வருகிறோம். நாங்கள் காசற்றவர்கள். நெஞ்சில் மாசற்றவர்கள். இவ்வளவு துயரத்திற்குள்ளும், கட்சி செழித்து நிற்கிறது. இவ்வளவு தோல்விக்கு பிறகும் அசையாமல் இருக்கிறோம்.

இலங்கையில், இனவெறி கொண்ட சிங்கள அரசு தமிழர்களை படுகொலை செய்து கொன்று குவிக்கிறார்கள். தமிழக எல்லைக்குள் புகுந்து மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இந்திய கடற்படையின் வேலை என்ன? தமிழக மீனவர்களை சுடாமல் தடுக்க வேண்டும். அவ்வாறு செய்தார்களா?.

இந்திய கடற்படை, இலங்கை அரசுக்கு கண்காணி போல வேலை செய்கிறது. கட்ச தீவு பகுதிகளில் கண்ணி வெடிகளை அவர்கள் புதைத்தார்களே. இந்திய கடற்படைக்கு மான உணர்ச்சி கிடையாதா? தமிழக மீனவர்கள் சுடப்பட்டு அவர்களின் ரத்தம் கடலில் கரைகிறது. உடல் கடலில் மிதக்கிறது. இது குறித்து நான் பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அவர் எனக்கு எழுதிய பதில் கடிதத்தில், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியதுதான் என்று கூறியிருக்கிறார்.

உலகெங்கும் உள்ள தமிழர்களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை. அரசியல் சீர்கேடுகளை போக்கி தமிழகத்தின் உயர்வுக்கு பாடுபடுவோம். மக்கள் கவலையை போக்க நாம் பணியை தொடருவோம ் ‌எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments