Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளு‌ம் க‌ட்‌சியு‌ம் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சியு‌ம் எ‌ண்ணெ‌ய் த‌ண்‌ணீ‌ர் போ‌ல் இரு‌க்க வே‌ண்டு‌‌ம்: முத‌ல்வ‌ர்!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (09:38 IST)
'' ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தனித்தனியே இருந்தாலும் மோதிக் கொள்ளக்கூடாது. எப்படி என்றால், அந்தக் காலக் கோயில் விளக்கில் உள்ள எண்ணெய், தண்ணீர் போல இருக்க வேண்டும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை கலைவாண‌ர் அர‌ங்‌கி‌ல் நட‌ந்த இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், இலவச எரிவாயு அடுப்புகள் வ ழ‌ங ்கும் விழா‌வி‌ல் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி பேசுகை‌யி‌ல், எதிர்க்கட்சிகள் அரசை விமர்சிக்கவே கூடாது என்று கூறுபவனல்ல நான். அதே சமயம் குறைகளை திருவள்ளுவர் "இடித்து' என்று குறிப்பிட்டது போல் ஜாடையாக உணர்த்த வேண்டும். வெவ்வேறு கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கொள்கை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், நடைமுறைப் பிரச்னைகளில் ஒருமித்த செயல்பாடு தேவை.

ஆளும் கட்சி நபரும், எதிர்க்கட்சி நபரும் வசிக்கும் ஒரு தெருவில் ஏதாவது வேறொரு வீடு பற்றிக்கொண்டால், "அது ஆளும் கட்சிக்காரன் வீட்டுக்கு அருகில்தானே இருக்கிறது. நமக்கு என்ன என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படக் கூடாது. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சங்கமிக்க வேண்டும் என்பவனல்ல நான். தனித்தனியே இருந்தாலும் மோதிக் கொள்ளக்கூடாது. எப்படி என்றால், அந்தக் காலக் கோயில் விளக்கில் உள்ள எண்ணெய், தண்ணீர் போல இருக்க வேண்டும்.

ஒரு சில கோயில்களில் நூதனமான விளக்குகள் இருக்கும். அதில், எண்ணெயின் உயரம் குறையும்போது, திரிக்கு எண்ணெய் கிடைக்காமல், அணைய நேரும். அதற்காக, எண்ணெய் உள்ள பகுதியில் நீரை ஊற்றுவார்கள். அந்த தண்ணீர் மீது எண்ணெய் மிதக்கும், திரிக்கும் எண்ணெய் கிடைக்கும். திரியும் எரியும். தண்ணீர் அளவு உயர, உயர எண்ணெய் உயரமும் அதிகரிக்கும். திரியும் எரிந்து ஒளி வீசும்.

பால் விலை உயர்த்தப்பட்டதற்காக ஒரு நடிகர் குறை கூறியுள்ளார். பால் விலை உயர்த்தப்பட்டதற்கு கருணாநிதி காரணமல்ல. பாலின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று மாடு வளர்ப்போர் சங்கம் வலியுறுத்தி வந்தனர். அவர்களது கோரிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் விவாதித்து, கேரளம், ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் உள்ளதை விட குறைவான விலையில் இருக்கும் விதத்தில் சிறிது விலை உயர்த்தப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் விலையை உயர்த்திக் கொடு என்றால், பாவம் உழவன் அவ்வளவு கஷ்டப்படுகிறான், நெல் கொள்முத‌ல் விலையை உயர்த்தக்கூடாதா என்று நானும் கேட்டு, மத்திய அரசும் கொடுத்து, நெல் கொள்முதல் விலையை அதிகப்படுத்திக் கொடுக்கிறோம். அதில் இருந்து நீங்கள் பால் விலையை பார்க்க வேண்டும் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments