Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழை ஆ‌ட்‌சி மொ‌ழி‌யா‌க்க வே‌ண்டு‌ம்: ராமதாஸ்!

Webdunia
திங்கள், 10 மார்ச் 2008 (16:32 IST)
'' தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்'' என்று ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் மரு‌த்துவ‌ர ் ராமதாஸ் வ‌லியுறு‌‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

செ‌ன்ன ை கலைவாண‌ர ் அர‌ங்‌கி‌ல ் நடைபெ‌ற் ற பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட் ட‌ த்‌தி‌ல ் ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் மரு‌த்துவ‌ர ் ராமதா‌ஸ ் பே‌சுகை‌‌யி‌ல ், தமிழுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை கணித்து சொல்ல வேண்டிய கூட்டம் இது. அதற்கான வரைவறிக்கை உங்களிடம் கொடுத்துள்ளோம். அதற்கு இறுதி வடிவம் கொடுத்து அரசிடம் சமர்ப்பிக்கவேண்டும். அரசும் இதன் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தற்போது பேசும் 10 தமிழ் வார்த்தைகளில் 8 வார்த்தை ஆங்கிலம் கலந்ததாகத்தான் இருக்கிறது. மீதம் உள்ள 2 தமிழ் வார்த்தைகளும் பிற வார்த்தை கலந்தது தான். இதை நாம் தான் தமிழ் என நினைக்கிறோம். இந்த காலத்தில் ஆங்கிலத்திற்கு முற்று புள்ளி வைத்து எல்லோரும் நல்ல தமிழில் பேசவும், எழுதவும் வேண்டும்.

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். தமிழ் மொழியின் விடிவு காலத்திற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். தமிழர்களாகிய நாம் தமிழின் மீது ஆர்வம் கொண்டு, தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுவோம். தமிழ் வளர்ச்சி குறித்து கலந்தாய்வுச் செய்யப்பட்டு இறுதி அறிக்கை முதலமைச்சர் கருணாநிதியிடம் தமிழ் அறிஞர்கள் வழங்குவார்கள்.

வரும் கல்வி ஆண்டிலேயே பள்ளிகளில் தமிழ் வழி கல்வியை 100 ‌விழு‌க்காடு கொண்டு வரவேண்டும். அதை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் கல்வி கொள்ளையர்களை பார்த்து உதைக்க வேண்டும். மேலும், யாரும் நீதிமன்றம் செல்லாமல் இருக்க சட்டம் கொண்டுவரவேண்டும் எ‌ன்று மரு‌த்துவ‌ர் ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments