Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌வீ‌ட்டுவ‌ரி, சொ‌த்துவ‌ரி உய‌ர்‌கிறது: த‌மிழக அரசு உ‌த்தரவு!

Webdunia
ஞாயிறு, 9 மார்ச் 2008 (13:17 IST)
‌ தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் இந்த ஆண்டு ஏப்ரல் 1- ஆ‌ம் தேதியிலிருந்து சொத்து வரியை திருத்தியமைக்கும் பணியை துவக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில ் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

காலிமனை உட்பட அனைத்து சொத்துகளுமே சொத்து வரி மாற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். சொத்துக்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக மின்சார வாரியம், நகரமைப்பு துறை, வாக்காளர் பட்டியல், ரேஷன் கார்டுகள் போன்ற விவரங்களை சேகரித்து கொள்ளலாம்.

சொத்துவரி நிர்ணயத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித சலுகையும் அளிக்க கூடாது. 5 முதல் 15ஆண்டுகள் வரையிலான கட்டிடங்களுக்கு 10 ‌ விழு‌க்காட ு தள்ளுபடியும், 15 முதல் 25 ஆண்டுகள் பழமையான கட்டிடங்களுக்கு 15 ‌ விழு‌க்காட ு தள்ளுபடியும், 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு 20 ‌ விழு‌க்காட ு தள்ளுபடியும் அளிக்க வேண்டும்.

வீட்டு உரிமையாளர்களே வசிக்கும் கட்டிடங்களுக்கு எவ்வித தள்ளுபடியும் அளிக்க கூடாது. கட்டிடங்களை கீற்று கொட்டகை, ஓட்டு வீடு, சிமெண்ட் கான்கிரீட் என பிரித்து மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. கான்கிரீட் வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை மதிப்பை விட தொழிற்கூடங்கள் அமைந்துள்ள கட்டிடங்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக அடிப்படை மதிப்பு நிர்ணயிக்க வேண்டும். வணிக பயன்பாட்டுக்கான கட்டிடங்களுக்கு மூன்று மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட வேண்டும்.

சொத்து வரியை மாற்றியமைக்கும் போது, குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 ‌ விழு‌க்காட ு, தொழிற்கூடங்களுக்கு 100 ‌ விழு‌க்காடு‌ம ், வணிக கட்டடங்களுக்கு 150 ‌ விழு‌க்காடு‌ம் உயர்த்தப்பட வேண்டும். இதில் சொத்து மதிப்பீடு செய்யப்பட்ட ஆண்டுகளுக்கு ஏற்ப உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். அரசு கட்டடங்களை பொறுத்த வரை சொத்து வரி 50 ‌ விழு‌க்காடு உயர்த்தப்பட வேண்டும்.

இவ்வாறு அ‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments