Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ல் குழ‌ந்தைக‌ள் உ‌ரிமைக‌‌‌ள்: டா‌க்ட‌ர் வச‌ந்‌தி தே‌வி!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (11:35 IST)
குழந்தைகளின் அடிப்படை உரிமை குறித்த வ ி டயங்கள் அவர்களது பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பெண்களின் ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் வசந்தி தேவி கூறினார்.

' குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் ஊடகங்களின் பங்கும், பொறுப்பும ்' என்ற தலைப்பில் சென்ன ை‌யி‌ல ் நட‌ந்த கருத்த ர‌ ங ்‌கி‌ல் ப‌ங்கே‌ற்று‌ப் பே‌‌சிய அவ‌ர், " பெண்கள் உரிமையை நிலை நாட்டுவது, அவர்களுக்கு உள்ள உரிமைகள் குறித்து தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல, குழந்தைகள் அவர்களுக்கு உரிய உரிமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வகையில் குழந்தைகள் உரிமைகள் பற்றி பாடங்கள் எல்லா பாடப்புத்தகங்களிலும் இடம் பெற வேண்டும ்" எ‌ன்றா‌ர்.

" இப்போது 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளிடம் குழந்தை உரிமைகளை பற்றி கூறும் பாடங்களை அவர்களுக்கு கற்றுத் தருகிறோம். அதே நேரத்தில் பள்ளிகளும் குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்த பாடங்களை, சிறப்பு வகுப்புகளில் கற்றுக் கொடுக்க வேண்டும். மனித உரிமைக் கல்வி நிலையம் என்ற அமைப்பின் மூலம் குழந்தைகள் உரிமை குறித்த 3 புத்தகங்களை வெளியிட்டு, அவற்றை 12 மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறோம்.

ம‌த்‌திய அர‌சி‌ன் நடவடி‌க்கை வே‌ண்டு‌ம ்!

ஆனால், குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுவது, அவர்களை பாதுகாப்பது என்பது தனி ஒரு அமைப்பால் நடக்கக் கூடிய செயல் அல்ல. இந்தப் பொறுப்பை அரசாங்கம் தானே முன்வந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு தக்கவாறு மத்திய அரசு முன்மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் உரிமை குறித்த பாடங்களை தற்போது எஸ்சி/எஸ்டி பள்ளிகளில் நடத்தி வருகிறோம். இதை அனைத்து பள்ளிகளுக்கு விரிவாக்க திட்டமிட்டுள்ளோம். இப்போது தமிழகத்தில் சிவகங்கை, திண்டுக்கல், ஈரோடு மற்றும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் குழந்தை உரிமை பாடங்களை கற்றுத் தர அனுமதி பெற்றுள்ளோம்.

விரைவில் அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களது உரிமையை அறிந்து கொள்ளும் வகையில் பாடத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். இதற்கு மத்திய மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்" என்றார் வச‌ந்‌தி தே‌வி.

ப‌த்‌தி‌ரிகை தகவ‌ல் அலுவலக‌‌த்‌தி‌ல் நட‌ந்த இ‌ந்த‌க் கரு‌த்தர‌ங்‌கி‌ல், பத்திரிகையாளர் வாசந்தி, கல்வியாளர் ராஜகோபாலன், குழந்தைகள் உரிமைக்கான தொண்டு நிறுவனம் துளிர் உள்ளிட்ட பல முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூட்டை மாற்றிய புயல்.. சென்னை பக்கம் திரும்புகிறதா? இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போகுதோ! - குழப்பத்தில் மக்கள்!

அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த பைத்தியக்காரர்களுக்கு நன்றி!! டொனால்ட் டிரம்ப்

முதல்வர், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை.. அதிமுக களத்தில் இறங்கும்: ஈபிஎஸ்

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

மனைவிக்கு புற்றுநோய் குணமானதாக கூறிய நவ்ஜோத் சிங் சித்து.. ரூ.850 கோடி கேட்டு நோட்டீஸ்..!

Show comments