Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேச‌ன் கடை‌யி‌ல் எடை குறை‌ந்தா‌ல் கடு‌ம் நடவடி‌க்கை : அரசு எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
செவ்வாய், 4 மார்ச் 2008 (18:50 IST)
பொதுவிநியோ க திட்டத்தில ் (ரேச‌ன்) உரி ய முறையில ் பொருட்கள ை விநியோகிக்கா த விற்பனையாளர்கள ் மீத ு கடும ் நடவடிக்க ை எடுக்கப்படும ் என்று உணவுத்துற ை அமைச்சர ் எ.வ. வேல ு எச்சரித்துள்ளார ்.

சென்ன ை மாநகரில ் பொத ு விநியோகத ் திட்டத்தின ் செயல்பாடுகள ் தொடர்பா க நாமக்கல ் கவிஞர ் மாளிகையில ் இன்ற ு உணவ ு அமைச்சர ் தலைமையில ் கூட்டம ் நடந்தத ு.

கூட்டத்த ை துவக்க ி வைத்த ு தமிழ க உணவுத்துறை அமைச்சர் வேலு பேசியதாவத ு:

பொதுவிநியோ க திட்டத்தில ், சென்னை மாநகரில் உள்ள வ.உ.சி. நக‌ர், ராயபுரம், பெரம்பூர், அண்ணாநகர், அம்பத்தூர், வில்லிவாக்கம ், திருவொற்றியூர் ஆகிய மண்டலங்களைச ் சேர்ந் த மக்களுக்க ு ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் துணை ஆணையர் (வடக்கு) அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு அறை தொலைபேச ி எண ்: 28551028- லும், மைலாப்பூர், பரங்கிமலை, சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, தி.நகர் மற்றும் தாம்பரம் ஆகிய மண்டலங்களில் உள்ளவர்கள் துணை ஆணையர் (தெற்கு) அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேச ி எண ்: 28551026- லும் புகார்கள் செய்யலாம்.

' நியாயவிலைக் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை என்றாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவில் பொருட்கள் வழங்கப்படாமல் குறைவாக வழங்கப்பட்டாலும், இருப்பு இல்லை என்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் தெரிவித்தாலும், குடும்ப அட்டை வழங்க காலதாமதம் போன்ற குறைபாடுகள ் இருந்தாலும் பொதுமக்கள் அலுவலக நேரத்தில் இந்த கட்டுப்பாட்டு அறைகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார்கள் செய்யலாம். அவர்களுடைய புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்ட ு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதுடன் புகார் மனு தாரர்களுக்கும் உரிய பதில் அளிக்கப்படும்.

கூட்ட நேரங்களில் புதி ய குடும் ப அட்டைகளுக்கா ன மனுக்களை பெறும் அலுவலர்கள் விடுமுறையில் சென்றால் உதவி ஆணையர்கள் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து மனுக்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை செய்யும் விசாரணை அலுவலர் அன்றைய தினமே உதவி ஆணையர்களிடம் அறிக்கை சமர்ப்பிக் க வேண்டும். மெத்தனமாகவும், அலட்சிய மனப்பான்மையுடன் பணி புரியும் அலுவலர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments