Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

Webdunia
வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (15:32 IST)
முட்டம் கடற்கரையிலிருந்து செ‌ன்று ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்து‌ள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை காவல் நிலைய சரகத்திற்கு உ‌‌ட்பட்ட தூத்தூர் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த ‌இர‌ண்டு ‌விசை‌ப்படகுக‌ளி‌ல் ‌மீனவ‌ர்க‌ள் ‌மீ‌ன் ‌பிடி‌க்க‌ச் செ‌ன்று‌ள்ளன‌ர். ஒரு விசைப் படகில் 12 மீனவர்களும், ம‌ற்றொரு விசைப்படகில் 13 மீனவர்களும் செ‌ன்று‌ள்ளன‌ர்.

இம் மீனவர்கள் 25 பேரும் கன்னியாகுமரி அருகேயுள்ள முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் தென்கிழக்கு திசைப் பகுதியில் புதன்கிழமை (பிப்ரவ‌ரி 27ஆ‌ம் தே‌தி) மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், இவர்களது இரண்டு படகுகளையும், அதிலிருந்த 25 மீனவர்களையும் பிடித்துச் சென்று இலங்கை நீர்கொழும்பு பகுதியில் வைத்துள்ளதாக தகவ‌‌ல்க‌ள் வ‌ந்து‌ள்ளன.

இல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் ‌பிடி‌த்து‌ச் செ‌ல்ல‌ப்ப‌ட்ட மீனவர்களை மீட்க கோரி, தூத்தூர் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர் சங்கத்தினர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடு‌த்து‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments