Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1,330 திருக்குறள்களை ஒப்புவித்த மாணவ‌ர்களு‌க்கு ரூ.5 ஆயிரம் பரிசு!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (09:43 IST)
1,330 திருக்குறள்களை ஒப்புவித்த மாண வ- மாணவிக்கு தலா ரூ.5 ஆ‌‌யி‌‌ர‌த்தை தமிழக அரசு வழங்குகிறது.

இது குறித்து த‌மிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில ், உலகத் தமிழ்மறை என்று போற்றப்படும் திருக்குறளின் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் மாணவ-மாணவிகளைப் பாராட்டும் வகையில், அவர்களுக்கு குறள் பரிசாக ரூ.5 ஆயிரம் வீதம், 24 மாணவர்களுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆணையின்படி, சென்னை பெரம்பூர் இ ரயில்வே மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் இரா.உதயப்பிரகாஷ், சென்னை விருகம்பாக்கம் ஏ.வி.எம். ராஜேஸ்வரி பதின் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் ச.உமாபாரதி ஆகியோருக்கு 1,330 குறட்பாக்களையும் ஒப்புவித்த திறமையைப் பாராட்டி ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள ், செய்தித் துறை செயலாளர், தமிழ் வளர்ச்சி இயக்குனர் ஆகியோர் அந்த மாணவனும ், மாணவியும் படிக்கும் பள்ளிக்கு நேரில் சென்று உரிய அரசாணையையும், பரிசுத் தொகையையும் வழங்க உள்ளனர் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments