Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மீனவ‌ர் நலவா‌ரிய‌‌‌ம்: 26 ‌க்கு‌ள் ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க வே‌ண்டு‌ம்!

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2008 (13:35 IST)
த‌மிழக ‌மீனவ‌ர் நலவா‌ரிய‌த்‌தி‌‌ல் உறு‌ப்‌பின‌ர்களாக‌ச் சேர 26 ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இது கு‌றி‌த்து, மீனவர் நலவாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூற ி‌ய ிருப்பதாவது:

மீனவர் நலவாரியம் மூலம் மீனவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறலாம். விபத்தில் இறக்கும், மீன் பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும். மீன் பிடிக்கும்போது இறக்கும் மீனவர் குடும்பத்துக்கு ரூ.20 ஆயிரமும், இயற்கை மரணம் அடைவோர் குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரமும், இறுதிச் சடங்குக்கு ரூ.2,500-ம் வழங்கப்படும்.

மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் கல்வி நிதியாக ரூ.1,250 முதல் ரூ.6,750 வரையும், திருமண உதவித் தொகையாக ஆ‌ண்களுக்கு ரூ.3 ஆயிரமும், பெண்களுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். மகப்பேறு உதவியாக ரூ.6 ஆயிரமும், கருக்கலைப்பு, கருச்சிதைவுக்கு ரூ.3 ஆயி ரம ும் பெறலாம். முதியோர் உதவித்தொகை மாதந்தோறும் ரூ.400 வழங்கப்படும்.

இந்த திட்ட உதவிகளைப் பெற 26-ந்தேதிக்குள் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பப் மனுக்களை பெற்று மீனவர் நலவாரிய உறுப்பினர்களாக சேர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!