Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்நா‌ள் முழுது‌ம் சிறையிருந்தாலும் கொள்கையை மாற்ற மாட்டேன்: திருமாவளவன்!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (15:05 IST)
'' வாழ்நா‌ள ் முழுவதும் சிறையில் இருந்தால் எனது கொள்கை நிலைப்பாட்டை மாற்றி கொள்ள மாட்டேன். உலக தமிழர்களுக்கு தார்மீக ஆதரவு த‌‌ந்த ே ‌‌ தீ‌ர்வோ‌ம ்'' எ‌ன்ற ு தொ‌ல். திருமாவளவன் கூ‌றினா‌ர ்.

விழு‌ப்புர‌ம் மாவ‌ட்ட‌ம், திட்டக்குடியை அடுத்த நிராமணியில் நட‌ந்த அம்பேத்கர் விழ ா‌வி‌ல் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொ‌ல். திருமாவளவன் கலந்து கொண்டு பேசுகை‌யி‌ல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தம்மை அர்ப்பணித்து கொண்ட ஒரே தலைவர் அம்பேத்கர். இந்தியாவில் வெவ்வேறு தலைவர்கள் போராட்டங்கள் நடத்த ினாலு‌ம், அவர்களுக்கெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகள் புரியவில்லை. அம்பேத்கர் தான் இதை வெளியே கொண்டு வந்தார்.

திரைப்படத்தில் பாய்ந்து பாய்ந்து அடிப்பவர்களால் தமிழ்நாட்டை வழிநடத்த முடியும ா? ஒரு பண்பாட்டு புரட்சியையே செய்தார் அ‌ம்பே‌த்க‌ர ். ‌ விடுதலை ச‌ிறு‌த்தைக‌ள் இய‌க்க‌ம் தா‌ன் ஒட்டுமொத்த தமிழர்களுக்காக பாடுபடும் இயக்கம். பெண்கள் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். அது தான் சமுதாயத்தின் வித்து. சினிமா நடிகர் களை ந‌ம்‌பி த ாழ்த்தப்பட்ட இளைஞர்கள் செ‌ல்ல‌க் கூடாது. ஏமாறவும் கூடாத ு.

ஜெயல‌லிதா என்னை சிறை வைக்க வேண்டும் என்கிறார ். வாழ ்நா‌ள் முழுவதும் சிறையில் இருந்தால் எனது கொள்கை நிலைப்பாட்டை மாற்றி கொள்ள மாட்டேன். உலக தமிழர்களுக்கு தார்மீக ஆதரவு த‌‌ந்தே ‌‌தீ‌ர்வோ‌ம் எ‌ன்று திருமாவளவன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments