Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (12:07 IST)
ஈரோடு அருகே ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு காவ‌ல்துறை‌யி னர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாளப்பாளையத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன்(62). இவருடைய இரண்டு ஏக்கர் நிலத்தை விற்பதற்காக நிலத்தின் சிட்டா அடங்கல் தேவைப்பட்டது. இதை வாங்குவதற்காக கூகல ு õர் கிராம நிர்வாக அதிகாரி சுகுமாரிடம ்(50) சென்று தனக்கு சிட்டா அடங்கல் தேவைப்படுகிறது என்றார். செங்கோட்டையன் கேட்ட ஆவணங்களை கொண்டுக்க வேண்டும் என்றால் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கிராம நிர்வாக அதிகாரி கூறினார்.

இதனால் கோபமடைந்த செங்கோட்டையன் ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவ‌ல்துறை‌யி‌ல ் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் கண்ணம்மாள், ஆய்வாளர் ராஜா மற்றும் போலீஸார், ரசாயனம் தடவிய பணத்தை செங்கோட்டையனிடம் கொடுத்து அனுப்பினர்.

பணத்தை எடுத்து சென்று நேற்று கிராம நிர்வாக அதிகாரி சுகுமாரிடம் கொடுத்தார். மறைந்திருந்த காவ‌ல்துறை‌யி னர் கையும் களவுமாக சுகுமாரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் வருவாய் துறை பணியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments