Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: ஜெயலலிதா!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (10:13 IST)
'' நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கக்கூடிய பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும ்'' என்று அ.இ. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது குறித்து அ.இ. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில ், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி பொறுப்பு ஏற்று நான்கு வருடங்கள் கூட நிறைவேறாத நிலையில், ஏழு முறை டீசல், பெட்ரோல் விலைகளை உயர்த்தி சாதனை புரிந்து, அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு வேதனையை அளித்து இருக்கிறது.

டீசல் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அச்சாணி. டீசல் விலை உயர்வின் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும். டீசல் விலை உயர்வு எல்லா வகைப் பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமாவதுடன் சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கக்கூடிய ஒன்றாகும்.

டீசல் விலை உயர்வால் பாசனத்திற்காக டீசல் பம்ப் செட்டுகளை பயன்படுத்தும் விவசாயிகள், சந்தைக்கு தங்கள் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஆனால், மத்திய அரசு இதைப்பற்றியெல்லாம் துளி கூட சிந்திக்காமல் தற்போது ஏழாவது முறையாக டீசல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் என்ற அளவிலும், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் என்ற அளவிலும் இன்று முதல் உயர்த்தியுள்ளது.

மத்திய அரசு ஆயத்தீர்வை, சுங்கத்தீர்வை மற்றும் பெட்ரோலியத்தின் மீது விதிக்கப்படும் செஸ் வரி ஆகியவற்றை குறைத்தாலே பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளின் உயர்வை தடுத்திருக்க முடியும். அத்தியாவசியப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தக்கூடிய, நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கக்கூடிய இந்த முறையற்ற விலை உயர ்வை திரும்பப் பெற வேண்டும் எ‌ன்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments