Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வி உதவி தொகை உத்தரவை கை‌விடவேண்டும்: ஜெயலலிதா!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (11:50 IST)
பிள‌ஸ் 2 தே‌‌ர்‌வி‌ல் 60 ‌விழு‌க்காடு ம‌தி‌ப்பெ‌ண் எடு‌த்தா‌ல் ம‌ட்டுமே ஆதி திராவிட மாணவர் களு‌க்கு கல்வி உதவி தொகை வ‌ழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்ற உ‌த்தரவை மத்திய அரசு உடனடியாக கை‌விட வே‌ண்டு‌ம்'' எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயலலிதா வ‌லியுறு‌த்‌தி உ‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ஆதி திராவிட மாணவ, மாணவியர்கள் 12ஆம் வகுப்பில் 60 ‌ விழு‌க்காடு மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே உயர் கல்வி பயிலுவதற்கான உதவித் தொகை வழங்கப்படும் என்னும் உத்தரவை ம‌த்‌திய அரசு விதித்திருக்கிறது. இதனால் ஆதி திராவிட மாண வ‌ர்க‌‌ளி‌ன் உயர் கல்விக்குத் தடை ஏற்படுவது நிச்சயம்.

ஆதிதிராவிட மாணவ சமுதாயத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய தி.மு.க. அரசு, வழக்கம் போல் மத்திய அரசின் பாட்டுக்குத் தப்புத்தாளம் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த உத்தரவு செயல்படுத்தப்படுமானால் சுதந்திர இந்தியாவில் ஆதி திராவிட மக்களின் அடிமைச் சாசனம் புதுப்பிக்கப்படும் என்பதை மத்திய அரசும், மாநில அரசும் உணர வேண்டும்.

ஆதி திராவிட மாண வ‌ர்க‌ளி‌ன் உரிமையை மீட்டுக் கொடுக்காமல் முதலமைச்சர் கடிதம் எழுதிக் காலத்தைப் போக்கிக் கொண்டிருப்பது, மத்திய அரசின் தவறான உத்தரவுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதாகவே அமையும். எனவே, ஆதி திராவிட மாணவர்கள் 12ஆம் வகுப்பில் 60 ‌ விழு‌க்காடு மதிப்பெண் பெற்றால் மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்னும் உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஜெயல‌லிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments