Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வி உதவித் தொகையை மாநில அரசு தொடர்ந்து வழங்கும்: கருணா‌நி‌தி!

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (18:14 IST)
சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீத ு, பதில் உரை வழங்கிய முதலமைச்சர் கருணா‌நி‌தி ‌‌‌கீ‌‌ழ்‌க்க‌ண்ட அறிவிப்புகளை வெளியிட்டு‌ள்ளார்.

ஆதி திராவிடர் மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற விஷயத்தில் மத்திய அரசு உறுதியாக இருந்தாலும், மாநில அரசு இந்த மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை தனது சொந்தப் பொறுப்பில் தொடர்ந்து வழங்கும்.

சலுகை விலை சிமெண்ட் விற்பனைக்கு நல்ல ஆதரவு கிடைத்திருப்பதால் 30.1.2008 வரை 15,400 மெட்ரிக் டன் சிமெண்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பயனாளிகளுக்கு விதி முறையை தளர்த்தும் வகையில் கட்டிட வரைபடத்தைக் காட்டி தாலுகா அலுவலகங்களில் ஒப்புதல் பெற தேவையில்லை என்று அறிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலாக கிட்டங்கிகளிலேயே வரைபடத்தைக் காட்டி 100 மூட்டைகள் என்பதற்கு பதிலாக 200 மூட்டைகள் சிமெண்ட் வரை பயனாளிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments