Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்ட‌ப்பேரவை 6 நாள் நடக்கும் : சபாநாயக‌ர்!

Webdunia
புதன், 23 ஜனவரி 2008 (16:49 IST)
த‌மிழக ச‌ட்ட‌ப் பேரவை 6 நா‌‌‌ட்கள‌் நடைபெறு‌ம் எ‌ன்று சபாநாயக‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் கூ‌றினா‌ர்.

தமிழக சட் ட‌ப் பேரவை‌‌‌யி‌ல் ஆளுன‌ர் உரை முடிந்ததும் சபாநாயகர் ஆவுடையப்பன் அறையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் ஆவுடையப்பன் செ‌ய்த‌ியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், இ‌ன்று நட‌ந்த சட் ட‌ப் பேரவை அலுவல் ஆய்வுக்கூட் ட‌த்‌தி‌ல் ம ுதலமைச்சர் கருணா‌நி‌த ி, அவை முனைவர் அன்பழகன், அமைச்சர ்க‌ள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதிஇளவழுதி, பேரவை துணைத்தலைவர் துரைசாமி, அரசு தலைமைக் கொறடா சக்கரபாணி ஆ‌கியோ‌ர் ப‌ங்கே‌ற்றன‌ர்.

ம‌ற்று‌ம் அ.இ. அ.தி.மு.க. செங்கோட்டையன், ஜெயக்குமார், காங்கிரஸ் சுதர்சனம், பா.ம. க. ஜி.கே. மணி, மார்க்சிஸ ்‌ட ் கம ்ய ூனிஸ ்‌ட் கோவிந்தசாமி, இந்திய கம ்ய ூனிஸ ்‌ட் சிவபுண்ணியம், விடுதலைச்சிறுத்தைகள் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். ம.தி.மு.க., விஜய காந்த் ஆகிய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அலுவல் ஆய்வுக் கூட்ட முடிவுப்படி சட் ட‌ப் பேரவை கூட்டத் தொடர் 6 நாட்கள் நடைபெறும். நாளை (24 ஆ‌‌ம் தே‌த ி) மறைந்த உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு இரங்கல் தெரிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து ஆளுன‌ர் உரைக்கு நன்றி தெரிவிக்குத் தீர்மானம் முன்மொழியப்படும். பிறகு அதன் மீது விவாதம் துவ‌ங்கு‌ம். 25, 26, 27 ஆகிய 3 நாட்களும் விடுமுறை.

28 ஆ‌ம் தேதி ஆளுன‌ர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் து வங்கும். 31 ஆ‌ம் தேதி வரை இந்த விவாதம் நடைபெறும். பிப்ரவரி 1 ஆ‌ம் தேதி முதலமைச்சர் கருணாநிதி விவாதங்களுக்கு பதில் அளித்து பேசுவார். சட் ட‌ப் பேரவை நடக்கும் நாட்களில் 1 ஆ‌ம் தேதி தவிர மற்ற நாட்களில் கேள்வி நேரமும் இடம் பெறும் எ‌ன்று சபாநாயக‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments