Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு: ‌ஆளுன‌ர் உரையில் அறிவிப்பு!

Webdunia
புதன், 23 ஜனவரி 2008 (12:24 IST)
தைத் திங்கள் முதல் நாளையே தம ி‌ ழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட த‌மிழ க அரச ு முடிவு ச ெ‌ ய்துள்ளதா க ஆளுந‌ர ் உரை‌யி‌ல ் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

த‌மிழக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ன ் இ‌ந் த ஆ‌ண்டி‌ன ் முத‌ல ் கூ‌ட்ட‌ம ் இ‌ன்ற ு தொட‌ங்‌கியத ு. இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ஆளுந‌ர ் சு‌ர்‌ஜி‌த ் ‌ சி‌ங ் ப‌ர்னால ா ‌‌ நிக‌ழ்‌த்‌தி ய உரை‌யி‌‌ன ் ‌ விவர‌ம ் வருமாற ு:

பெரும ் புலவரும், தனித்தம ி‌ ழ ் இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில், ஐநூறுக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள், 1921-ஆம் ஆண்டு சென்னை-பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி, தமிழர்களுக்கென்று ஒரு ‘தனி ஆண்டு’ தேவை என்ற ு கருதி, அ‌ ய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவதென்றும், அதையே ‘தம ி‌ ழ ் ஆண்டு’எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தார்கள்.

அந்தக் கருத்தினை, முப்பத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பே முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஏற்றுக்கொண்டு, 1971-ஆம் ஆண்டு முதல் தம ி‌ ழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972-ஆம் ஆண்டு முதல் தம ி‌ ழ்நாடு அரசிதழிலும் நடைமுறைப்படுத்திட ஆணை பிறப்பித்தார். திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தம ி‌ ழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாக எல்லாத ் தம ி‌ ழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால்; தைத் திங்கள் முதல் நாளையே தம ி‌ ழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு ச ெ‌ ய்துள்ளது.

எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடிவரும் தமிடிநநாட்டு மக்கள்; இனி - தம ி‌ ழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மக ி‌ ழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்களிட்டு; வரிசை விளக்குகளால் ஒளியும ி‌ ழ ் இல்லங்கள் புது எழில் காட்டிட; புத்தாடை புனைந்து தம ி‌‌ ழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும் ஆடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும்; தம ி‌ ழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மக ி‌ ழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர்.

இவ்வாறு ஆளுந‌ர் உரையில் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments