Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் தொகை பெருக்கத்தை குறைத்தால் நோய்கள் குறையும்: கருணாநிதி!

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2008 (10:07 IST)
'' மக்கள் தொகை பெருக்கத்தை குறைத்தால் நோய்கள் குறையும ்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

கட‌ந்த 13 ஆ‌ண்டுகளாக சென்னையில் செய‌ல்ப‌‌ட்டு வரு‌ம் பாரத் ஸ்கேன்ஸ் நிறுவ ன‌த்‌‌தி‌ன் `3 டி எஸ்லா எம்.ஆர்.ஐ', `ஸ்பெக்ட் சிடி' ஆகிய புதிய அதிநவீன ஸ்கேன் கருவிகளை முதலமைச்சர் கருணாநிதி துவ‌க்‌கி வை‌த்து பேசுகை‌யி‌ல், ஒரு நோய்க்கு மருத்துவம் செய்ய வேண்டுமென்றால் நோய் நாடி, நோய் முதல் நாடி என்பது போல், தொடங்க வேண்டியுள்ளது. ஒரு வேளை சாப்பிட்ட சாப்பாடு செரித்த பின்னர்தான் அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும். அப்படி இருந்தால் உடலுக்கு மருந்து வேண்டியதில்லை. சாப்பிட்ட சாப்பாடு, செரிக்கத் தேவையான நேரத்தைக் கொடுக்காமல் குடலுக்குள் போய் இறங்குகிறதா என்பதை பற்றி கவலைப்படாமல் மேலும், மேலும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் யாக்கைக்கு மருந்தென்று ஒன்று வேண்டும்.

நோய்க்கு மிக முக்கிய காரணமாக, இன்றைக்கு இருப்பது மக்கள்தொகைப் பெருக்கம். மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக, அதிகமாக அதன் காரணமாக நோய் உருவாவதும், அது பரவுவதும் இயற்கையாகிவிட்டது. மக்கள் பெருக்கத்தை குறைத்தால் நோய்கள் குறையும். குறிப்பாக, தொற்றுநோய்கள் குறையும். தொற்று நோய்கள், ஆயிரம் மக்களை ஒரே நாளில் சூறையாடும். இன்றைக்கு பல நோய்கள் வந்து கொண்டிருக்கின்றன. நோய் நாடி, நோய் முதல் நாடி என்கிறோம். வைத்தியர்கள் நாடி பார்க்கிறார்கள் என்றால் அது நாடி பார்ப்பது அல்ல.

என்ன நோய் என நாடி பார்ப்பதால் அதற்கு நாடி என்று பெயர் வந்ததோ என்னவோ, பித்தம், வாதம், சிலேஷ்மம் ஆகிய 3 நாடிகளில் எது அதிகமாக துடிக்கிறது என்று கண்டறிந்து மருந்து கொடுக்கும் சித்த வைத்தியம் இருந்தது. இப்போது, ஆங்கில முறை, ஸ்கேன் வரையில் இமானுவேல் ப ா‌ர ்த்து சொல்கின்ற ஆங்கில முறை, மேல்நாட்டு முறை ஒரு பெரிய வரத்தை போல் மனிதனை வாழவைத்துக் கொண்டிருக்கிறது எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments