Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் ஒரே நா‌ளி‌ல் 800 மூ‌ட்டை ரேச‌ன் அ‌ரி‌சி ப‌றிமுத‌ல்!

Webdunia
சனி, 19 ஜனவரி 2008 (17:15 IST)
த‌மிழக‌த்‌தி‌ன் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் அ‌திகா‌ரிக‌ள் நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல ் இ‌ன்று ஒரே நா‌ளி‌ல் 800 மூ‌ட்டை ரேச‌ன் அ‌ரி‌சி ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. இது தொட‌ர்பாக 4 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

பொ‌ள்ளா‌‌ச்‌சி‌‌‌யி‌ல் குடிமை‌ப் பொரு‌ள் வழ‌ங்க‌ல் அ‌திகா‌ரிக‌ள் நட‌த்‌திய வாகன‌ச் சோதனை‌யி‌ல ், லா‌ரி‌யி‌ல் கட‌த்த‌ப்ப‌ட்ட 200 மூ‌ட்டை ரேசன் அ‌ரி‌சி ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

பொ‌ள்ளா‌ச்‌சி பால‌க்காடு சாலை‌யி‌ல் ஜ‌மீ‌ன்மு‌த்தூ‌ர் ‌பி‌ரி‌வி‌ல் வ‌ட்டா‌ச்‌சிய‌ர் மு‌த்துராம‌லி‌ங்க‌ம் தலைமை‌யி‌ல் வாகன‌ச் சோதனை நட‌ந்தது. அ‌ந்த வ‌ழியாக வ‌ந்த லா‌ரியை ம‌றி‌த்த போத ு, அத‌ன் ஓ‌ட்டுநரு‌ம் ‌கி‌ளீனரு‌ம் இற‌ங்‌கி ஓடி‌வி‌ட்டன‌ர்.

இதையடு‌த்து அ‌ந்த லா‌ரியை‌ச் சோதனை‌யி‌ட்டபோது அ‌தி‌ல ், தலா 50 ‌கிலோ எடை கொ‌ண்ட 200 மூ‌ட்டை ரேசன் அ‌ரி‌சி பது‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டு இரு‌ந்தது க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டது. மொ‌த்த‌ம் 10 ட‌ன் எடை கொ‌ண்ட இ‌ந்த அ‌ரி‌சி கேரள‌த்‌தி‌ற்கு கொ‌ண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்டது ‌விசாரணை‌யி‌ல் தெ‌‌ரியவ‌ந்தது.

சேல‌த்‌தி‌ல் 200 மூ‌ட்டை பறிமுதல்!

இதேபோ ல, சேலம் மாவட்ட காவ‌ல் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் பாஸ்கர‌ன் உத்தரவின் பேரில் தனிப் பிரிவு ஆ‌ய்வாள‌ர் செல்வம ், உத‌வி ஆ‌ய்வாள‌ர்க‌ள் ராமச்சந்திரன ், குணசேகரன் ஆ‌கியோ‌ர் மல்லூரை அடுத்த அம்மம்பாளையம் ஏரிக்கரை சாலை‌யி‌‌‌ல் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு லாரியும ், அதற்கு பின்னால் ஒரு `மின ி' லாரியும் வந்தது. இந்த 2 லாரிகளையும் சோதனை செ‌ய்தபோத ு, அ‌வ‌ற்‌றி‌ல் மொ‌த்த‌ம் 200 மூ‌ட்டை ரேசன் அரிசியை‌ப் பது‌‌க்‌கி வை‌த்‌திரு‌ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடு‌த்த ு, ரேசன் அரிசி மூட்டைகளை கடத்திய சவுந்தர ராஜன் என்ற ராஜா (வயது 30), லா‌ரி ஓ‌ட்டுந‌‌ர் சேகர் (34), லா‌ரி ‌கி‌ளீன‌ர் குமார்(23), ‌மி‌னி லா‌ரி ஓ‌ட்டுந‌ர் ஏசு (25) ஆ‌கிய 4 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

மதுரை‌யி‌ல் 400 மூ‌ட்டை பறிமுதல்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவா‌ய் கோ‌ட்டா‌ச்‌சிய‌ர் ராஜாராம ், வ‌ட்டா‌ச்‌சிய‌ர் தனசேகரன ், தனித் துணை ஆ‌ட்‌‌சிய‌ர் கோவிந்தராஜ ், காவ‌ல்துறை உத‌வி ஆ‌ய்வாள‌ர் வேல் முருகன் ஆகியோர் இன்று கால ை, தும்மக்குண்டு பிரிவு அரு‌கி‌ல் ஒரு லாரியை மறித்து சோதனை‌யி‌ட்டன‌ர். அப்போது அதில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

அ‌ந்த லாரியை‌ச் சோதனை‌யி‌ட்ட‌ போது அ‌தி‌ல் 400 மூ‌ட்டை ரேசன் அரிசி இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதை‌ப் ப‌றிமுத‌ல் செ‌ய்த அ‌திகா‌ரிக‌ள ், த‌ப்‌பி ஓடிய கு‌ம்பலை‌த் தேடி வருவதாக‌த் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

மு‌ன்னதா க, த‌மிழக‌ ரேச‌ன் அ‌ரி‌சி கேரள‌த்‌தி‌ல் ‌வி‌ற்க‌ப்படுவதாக அ‌ம்மா‌நில அரசு நே‌ற்று கூ‌றி‌யிரு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments