Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தம் திருட்டு : ஒருவர் கைது கர்நாடகா கும்பலுக்கு வலை‌வீ‌ச்சு

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
புதன், 16 ஜனவரி 2008 (15:03 IST)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானையை சுட்டுக்கொன்று தந்தம் திருடிய கும்பலை விரைவில் பிடித்து வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய கர்நாடகா கும்பலை தேடிவருகின்றனர்.

webdunia photoWD
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனக்கோட்டம் பாவானிசாகர் வனச்சரகத்தை சேர்ந்தது காளிதிம்பம். இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொள்ளை கும்பல் ஒன்று ஆண்யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தந்தத்தை திருடி சென்றுவிட்டது. இந்த சம்பவம் வனத்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து ஈரோடு மண்டல வனபாதுகாவலர் துரைராசு உத்திரவின்பேரில் சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி இரமாசுப்பிரமணியம் மேற்பார்வையில் பவானிசாகர் ரேஞ்சர் மோகன், வனவர் பிலோமினராஜ் மற்றும் சுப்புநாயுடு, கோவிந்தராஜ், பழனிசாமி உள்ளிட்டோர் கொண்ட வனக்குழுவினரும், வனரோந்துபடை ரேஞ்சர் சிவமல்லு தலைமையில் ஒரு குழுவினரும் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று பவானிசாகர் ரேஞ்சர் மோகன் தலைமையில் சென்ற வனக்குழுவினர் இரவு முழுவதும் சம்பவம் நடந்த இடத்தை சுற்றி சுமார் பத்து கி.மீ., த ு õரத்தை கண்காணித்து முற்றுகையிட்டனர். அப்போது நேற்று அதிகாலை ஒருகும்பல் வனப்பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் புதையல் தோண்டுவதுபோல் தோண்டிக்கொண்டிருந்தது.

உடனே வனப்படையினர் அப்பகுதி சென்றனர். அப்போது இவர்கள் வரும் சத்தம்கேட்டு அந்த கும்பல் தப்பித்துவிட்டது. ஒருவரைமட்டும் வனத்துறையினர் பிடித்தனர். அவன்பெயர் சந்திரன் (22). ஆசன ு õர் அருகே உள்ள பாலப்படுகையை சேர்ந்தவன். இவனிடம் விசரித்தபோது யானையை கொன்று திருடிய தந்தத்தை பள்ளத்தில் புதைத்து வைத்து அதை எடுக்க முற்பட்டது தெரியவந்தது.

உடனே சம்பந்தப்ட்ட இடத்தில் தோண்டி ஒருஜோடி தந்தத்தை வனத்துறையினர் எடுத்து வந்தனர். சந்திரனை கைது செய்து விசாரித்தபோது கடந்த 9 ம் தேதி கர்நாடகா கும்பலுடன் கர்நாடகா வனப்பகுதியை சேர்ந்த எத்தேகவுண்டன்தொட்டியில் இருந்து வனத்துறை வழியாக மொத்தம் ஏழு பேர் வந்ததாகவும் சந்திரனையும் அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வரும்போது அங்கு யானை கூட்டமாக மேய்ந்துள்ளது.

இதைபார்த்த கொள்ளையர்களில் பேதன் என்பவன் நாட்டுதுப்பாக்கியால் அதில் உள்ள ஆண்யானையை குறிவைத்து சுட்டுள்ளான். சரியாக யானையின் நடுமண்டையில் குண்டு தாக்கியதால் சம்பவ இடத்திலேயே பிளிரிக்கொண்டு யானை இறந்துள்ளது. இதை பார்த்தவுடன் மற்ற யானைகள் பயந்து ஓடியுள்ளது. பின் இவர்கள் சென்று இறந்த யானையின் துதிக்கையை அரிவாலால் வெட்டி திராவகம் ஊற்றி யானை தந்தத்தை திருடி சென்று பள்ளத்தில் பதுக்கி வைத்ததாக கூறினான்.

தப்பியோடிய கர்நாடகா கும்பலை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவம் நடந்தது கடந்த 13 ம் தேதிதான் வனத்துறையினருக்கு தெரிவந்தது. சம்பவம் தெரிந்த இரண்டே நாளில் கொள்ளையர்களை கைது செய்த பவானிசாகர் ரேஞ்சர் மோகன் மற்றும் குழுவினரை அதிகாரிகள் பாராட்டினர்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments