Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞ‌ர்க‌ள் உ‌ள்ள‌த்‌தி‌ல் தே‌சிய உண‌ர்வு வலு‌ப்பட வே‌ண்டு‌ம்: த‌மிழக முத‌ல்வ‌ர்!

Webdunia
ஞாயிறு, 13 ஜனவரி 2008 (12:23 IST)
இ‌ன்றைய இளைஞர்கள் உள்ளத்தில் தேசிய உணர்வு வலுப்பட வேண்டும் எ‌ன்று த‌மிழக முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

13- வது தேசிய இளைஞர் விழாவின் துவக்க விழா நே‌ற்று சென்னையில் நடைபெற்றது. தமிழக முதல்வர் கருணாநிதி விழாவைத் துவக்கி வைத்து துவக்க உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது :

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 2 லட்சத்து 32 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 10-வது தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூ.150 ‌ வீதமு‌ம ், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.200 வீதமும், இளங்கலை மற்றும் முதுகலை படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.300 ‌ வீதமு‌ம ் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

மேலும் விளையாட்டு வீரர்கள ், வீராங்கனைகளை ஊக்கப்படுத்த மாநில அரசு பல்வேறு ஊக்கத் தொகைகளை வழங்கி வருகிறது.

இளைஞர்கள் உள்ளத்தில் தேசிய உணர்வு வலுப்பட வேண்டும். உலக அளவில் இந்தியாவை ஒளிமிக்க நாடாக மாற்றுவது இளைஞர்கள் கையில் உள்ளது. வலுவான உடல், உறுதி வாய்ந்த நெஞ்சம் உள்ளவர்களாக இளைஞர்கள் விளங்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டவே வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தில் இந்த தேசிய இளைஞர் விழா நடைபெற்று வருகிறது.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

முன்னதாக பே‌சிய மத்திய பஞ்சாயத்து ராஜ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர ், " இந்தியா இளைஞர்களின் நாடு. இந்தியாவில் 77 கோடி இளைஞர்கள் உள்ளனர். அதாவது 35 வயதிக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். முன்னேற்றத்தை தீர்மானிப்பது இவர்கள் கைகளில்தான் உள்ளது. இதற்கு தேசிய ஒற்றுமை அவசியம். அந்த தேசிய ஒற்றுமையை பிரதிபலிப்பது தான் இந்த தேசிய இளைஞர் விழ ா" என ்றா‌ர்.

இதையடு‌த்து, 2006-07- ம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் விருது பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் கண்கவர் அணிவகுப்பு நடத்திக் காட்டினர்.

இ‌வ ்விழாவில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலர் எஸ ். க ே. அரோரா வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழக சுற்றுச் சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ட ி. ப ி. எம் மைதீன்கான் நன்றி கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments