Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 528 பதவிகளுக்கு பிப்ரவரி 20ஆ‌ம் தேதி இடைத்தேர்தல்!

Webdunia
சனி, 12 ஜனவரி 2008 (10:11 IST)
'' உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு பிப்ரவரி 20 ஆ‌ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும ்'' என்று மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் கூ‌றினா‌ர்.

சேலம் மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆய்வு கூட் ட‌ம் கூட்டம் முடிந்ததும் மாநில தேர்தல் ஆணையர் டி.சந்திரசேகரன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 528 பதவிகள் காலியாக உள்ளன. அதன்படி, மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர் பதவி-2, ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் பதவி-15, பஞ்சாயத்து தலைவர் பதவி-39, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள்-425, நகராட்சி வார்டு உறுப்பினர்-5, மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர்கள்-6 மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 36 என மொத்தம் 528 காலி பதவிகள் உள்ளன.

அவைகளுக்கு பிப்ரவரி 20 ஆ‌ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. பிப்ரவரி 1 ஆ‌ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, அன்று முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் தொடங்குகிறது. 8 ஆ‌ம் தேதி அன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். 9 ஆ‌ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 11 ஆ‌ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பபெற கடைசி நாள். 20 ஆ‌ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 22 ஆ‌ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகிறது எ‌ன்று ச‌ந்‌திரசேக‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments