Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தி வனப்பகுதியில் யானையைக் கொன்று தந்தம் திருட்டு!

ஈரோடு வேலு‌ச்சா‌மி

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (20:41 IST)
சத்தியமங்கலம் அடுத்து திம்பம் வனப்பகுதியில் ஆண ் யானையைக் கொன்று தந்தம் திருடிய கும்பலைப் பிடிக்க வனத்துறையினர் வலைவிரித்துள்ளனர்.

webdunia photoWD
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. இங்கிருந்து தலமலை செல்லும் வழியில் உள்ளது காளி திம்பம். இது பவானி சாகர் வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியாகும். காளி திம்பத்திற்கு வடக்கு 2 கி.மீ. தொலைவில் ஆண ் யானை ஒன்றை கொள்ளையர்கள் துப்பாக்கியில் சுட்டுக்கொன்று தந்தத்தை திருடிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தெரிந்தவுடன் சத்தியமங்கலம் மாவட்ட வன அதிகாரி ராம சுப்பிரமணியம், பவானி சாகர் ரேஞ்சர் மோகன், வன க‌ண்கா‌ணி‌ப்பு‌ப் பட ை, ரேஞ்சர் சிவமல்லு உள்ளிட்டோர் சென்று பார்வையிட்டனர். சுமார் மூன்று நாளுக்கு முன் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்ககின்றனர்.

தற்போது தெங்குமரஹடா அருகே உள்ள கூலித்துறைப்பட்டியில் வனப்பகுதியில் ரோந்து சுற்றும் பணியாளர்களுக்கு அதிரடிப்படையினர் விஷேச பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த சமயத்தை பயன்படுத்தி யானை தந்தம் திருடும் கும்பல் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளது குறிப்பிடதக்கது.

இன்று பிரேத பரிசோதனை நடக்கவுள்ளது. இதன் பின்னர்தான் துப்பாக்கி குண்டு பாய்ந்த இடம் மற்றும் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளது என்பது தெரியவரும். வனக் கொள்ளையர்கள் மற்றும் யானையை கொன்று தந்தம் திருடும் கும்பலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்தும் இந்த சம்பவம் நடந்துள்ளது வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments