Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌‌க்கு வரு‌ம் மோடியை மு‌ற்றுகை‌யிடுவோ‌ம்: ‌விடுதலை‌‌சிறு‌த்‌தைக‌ள்!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (18:04 IST)
'' ஒரு தாய் மக்களாக வாழ்ந்த இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, தலித் மக்களை கூறு போட்டு இன கலவரங்களை நடத்திய குஜராத் முதலமை‌ச்ச‌ர் நரேந்திர மோடியை மு‌ற்றுகை‌யி‌ட்டு போரா‌ட்ட‌ம் நட‌த்துவோ‌ம்'' எ‌ன்று ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் ‌கூ‌றியு‌ள்ளது.

இது கு‌றி‌த்து முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவஹருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு, சிறுபான்மையினர் கூட்டமைப்பு தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் சென்னையில் இன்று செ‌ய்‌‌‌தியாள‌‌ர்களு‌க்கு அ‌‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல ், ஒரு தாய் மக்களாக வாழ்ந்த இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, தலித் மக்களை கூறு போட்டு இன கலவரங்களை நடத்திய குஜராத் முதலமை‌ச்ச‌ர் நரேந்திரமோடி 14ஆ‌ம் தேதி சென்னை வருகிறார். அவரை எழுத்தாளர் சோ மேடை போட்டு அழைக்கிறார். ஜெயலலிதா அவருக்கு விருந்து அளிக்கிறார்.

குஜராத் கலவரத்துக்கு மு‌க்‌கிய காரணமான அவரால் ஏராளமான உயி‌ரிழ‌ப்புக‌ள் ஏ‌ற்ப‌ட்டன. மதப் படுகொலை நடத்திய நரேந்திர மோடி சென்னை வருகை தரும்போது எதிர்ப்பது மனசாட்சியுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும். ஜனவ‌ரி 14‌ஆ‌ம் தேதி மாலை 5 மணி‌க்கு ஜனநாயக முறையில் கருப்பு கொடியுடன் விழா நடக்கும் காமராஜர் அரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறோம்.

அந்த நிகழ்ச்சியை வேறு இடத்திற்கு மாற்றினாலும் அங்கு சென்றும் போராட்டம் நடத்துவோம். தடையை மீறி முற்றுகை போராட்டம் நடந்தே தீரும் எ‌ன்று அவ‌ர்க‌ள் கூ‌றின‌ர்.

ஏ‌ற்கனவ ே, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள், தலித் இஸ்லாமிய கிறிஸ்தவ கூட்டமைப்பு, புரட்சி பாரதம், பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நரேந்திர மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்‌திரு‌ப்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments