Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிச்சந்தையிலு‌ம் சிமெண்ட் விலை கணிசமாக குறையும்: கருணாநிதி!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (17:24 IST)
'' அய‌ல்நாடுக‌ளி‌ல் இரு‌ந்து இறக்குமதி செய்யப்படும் சிமெண்‌ட்டி‌ன் ‌விலையை கட‌்டு‌ப்படு‌த்துவத‌ற்கு த‌மிழக அரசு எடு‌‌த்து வரு‌ம் ப‌ல்வேறு முயற்சிகளின் மூல‌ம் வெளிச்சந்தையிலு‌ம் சிமெண்ட் விலை கணிசமாக குறையும்'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல ், தமிழக அரசு தனியார் சிமெண்ட் ஆலை அதிபர்கள் சிமெண்ட் விலையைக் குறைக்க முன் வரவில்லை என்றால் அரசே நாட்டுடைமையாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என முடிவெடுத்து அறிவித்தோம். அப்போது கூட சிலர், இதுவெறும் ஸ்டண்ட் என்றும், மிரட்டுவதற்கான அறிவிப்பு என்றும் சொன்ன நேரத்தில் நாட்டுடைமையாக்குவதற்கான சட்ட முன்வடிவினை தயாரிக்கும் பணியில் அரசு ஈடுபட்டது.

அந்தச் செய்திகளையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகுதான் தனியார் சிமெண்ட் ஆலை அதிபர்கள், அவர்களுக்குள் கலந்தாலோசித்து அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திட தாங்களாகவே முன்வந்தார்கள். அந்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர்தான் அந்த ஆலை அதிபர்கள் அரசுக்கு ஒரு கடிதம் கொடுத்தார்கள். அந்தக் கடிதத்தில் முதல் அமைச்சர் தெரிவித்த கருத்தினை மனதிலே கொண்டு, பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களுக்கும், மற்றும் நடுத்தர மக்களுக்கும் பயனளிக்கத்தக்க வகையில் மாதம் ஒன்றுக்கு இருபது இலட்சம் மூட்டைகள் சிமெண்டை குறைந்த விலையில் மூட்டை ஒன்றுக்கு 200 ரூபாய் வீதம் விற்பதற்கு ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்து, அந்தச் செய்தி அனைத்து ஏடுகளிலும் வெளிவந்து, தமிழகத்திலே பல்வேறு தரப்பினரும் தங்களுடைய மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்தும், அரசுக்கு நன்றி கூறியும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில், ஒரு சில தலைவர்கள் மட்டும் சொந்த விருப்பு வெறுப்பின் காரணமாக இந்த அறிவிப்பினை கண்துடைப்பு என்று கருத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

கண் துடைப்பு என்று சொல்வதற்குக் காரணமாக இறக்குமதி செய்யப்படும் சிமெண்டை மூட்டை ஒன்றுக்கு ரூ. 160-க்கு விற்க முடிகிறபோது, உள்ளூரில் உற்பத்தி செய்கின்ற சிமெண்டை ரூ. 200-க்கு விற்க முன் வந்திருப்பது விலை குறைப்பு அல்ல என்று கூறுகிறார்கள். குறை கூற வேண்டுமென்று நினைக்கின்றபோது, அதுபற்றிய விவரங்களை யாரிடமாவது கேட்டறிந்து வெளியிட்டால் நல்லது. எல்லாமே தங்களுக்குத் தெரியும், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைப்பது சரியல்ல. சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு 160 ரூபாய் விலையில் விற்க முடிகிறபோது என்றால் அந்த விலைக்கு எங்கே கிடைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

வெளிநாடுகளிலிருந்து சிமெண்டை மத்திய அரசின் நிறுவனமான எம்.எம்.டி.சி., மூலம் இறக்குமதி செய்யும்போது சென்னை துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் உள்ள சிமெண்ட்டின் விலைதான் மூட்டை ஒன்றுக்கு 160 ரூபாய் என்று மத்திய அரசின் நிறுவனம் நிர்ணயம் செய்தது.

கடலில் கப்பலில் உள்ள சிமெண்ட் தானாக கட்டிடம் கட்டப்படுகின்ற இடத்திற்கு வந்து விடாது. அந்த சிமெண்டை கப்பலிலிருந்து இறக்கி, அதற்காக அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளையெல்லாம் கொடுத்து, சிமெண்ட்டை கப்பலிலிருந்து விற்பனை செய்கின்ற இடம் வரை கொண்டு சேர்த்திட அதே 160 ரூபாய் விலை என்று அர்த்தமல்ல. மூட்டை ஒன்றுக்கு வரியாக 30 ரூபாயும், சிமெண்டை இறக்கி ஏற்றி, போக்குவரத்துச் செய்ய 40 ரூபாயும் அடக்கமாகிறது. இதையெல்லாம் சேர்த்து கணக்கிட்டால் ஒரு மூட்டைக்கு 230 ரூபாய் அடக்கம் ஆகிறது. இந்த அடக்க விலையான ரூ. 230 என்பதையும், தற்போது தமிழகத்திலே உள்ள சிமெண்ட் ஆலை அதிபர்கள் மூட்டை ஒன்றுக்கு ரூ. 200 என்று ஒவ்வொரு மாதமும் இருபது இலட்சம் மூட்டைகளை விற்க ஒப்புக் கொண்டிருப்பதையும் ஒப்பிட்டுப்பார்த்தால், அரசு எந்த அளவிற்கு இந்த முயற்சியிலே வெற்றி பெற்றுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கழக அரசின் எல்லா நடவடிக்கைகளையும் கண்ணை மூடிக்கொண்டு குற்றம் சொல்ல முற்பட்டால் அது கவைக்கு உதவாது. மேலும் முன்பே அரசு அறிவித்ததற்கு இணங்க இறக்குமதி செய்யப்படும் சிமெண்டும் வந்து சேர்ந்தவுடன் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மூலமாக அடக்க விலைக்கு விற்கப்படும். அது மட்டுமன்றி, டான்செம் விளம்பரத்தில் தெரிவித்ததைப் போல 100 டன்களுக்கு மேல் சிமெண்ட் வாங்க எண்ணுபவர்கள் மட்டுமே சென்னை அல்லது தூத்துக்குடி துறைமுகங்களுக்கு வரும் கப்பலில் இருந்து மூட்டை ஒன்றுக்கு ரூ.160 செலுத்தி வாங்கலாம். இவ்வாறு எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளின் மூலமாக சிமெண்ட் விலை வெளிச்சந்தையில் கணிசமாக குறையும் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

Show comments