Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியாத்தத்தில் நாளை அ.இ.அ.தி.மு.க. உண்ணாவிரதம் : ஜெயலலிதா!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (17:55 IST)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரசபை தலைவர் அ.இ. அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால் குடியாத்தம் நகராட்சியில் எவ்விதமான மக்கள் நலப்பணிகளும் நடை பெறாமல் தி.மு.க. அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனை க‌ண்டி‌த்து அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் நாளை உ‌ண்ணா‌விரத‌ம் நட‌க்‌கிறது எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அ.இ. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இ‌ன்ற ு வெளியிட்டுள்ள அறிக்கையில ், மக்கள் பணியின் மகத்துவத்தை உணர்ந்து அ.இ. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் நகரசபை தலைவர்கள் மக்களுக்காக பணியாற்றி வருகிறார்கள். ஆனால் தி.மு.க. நகராட்சி தலைவர்களை கொண்டு இயங்கி வருகின்ற நகராட்சி நிர்வாகங்களில் குளறுபடிகளும், மக்கள் பணியை துச்சமென மதிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மக்கள் நலப்பணியில் அ.இ. அ.தி.மு.க. ஆர்வம் காட்டுவதை சகித்துக் கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்கள் நலப்பணிகளை நிறைவேற்றாமல் முடக்கி வைப்பதில் தி.மு.க. கவுன்சிலர்களும், அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க. அரசும் செயல்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரசபை தலைவர் அ.இ. அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால் குடியாத்தம் நகராட்சியில் எவ்விதமான மக்கள் நலப்பணிகளும் நடை பெறாமல் தி.மு.க. அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அங்கு கடந்த 6 மாத காலமாக நகராட்சி ஆணையாளர் பொறுப்பும் காலியாக உள்ளது.

ஆற்காடு நகராட்சியின் ஆணையாளர் இந்த நகராட்சியின் கூடுதல் ஆணையாளராக பொறுப்பு வகித்து வருவதால், அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பது தெரிய வருகிறது. இதன் காரணமாக குடியாத்தம் நகராட்சியில் சுகாதாரப் பணிகள், புதிய குடிநீர் குழாய் இணைப்புகள், வரி விதிப்பு உள்ளிட்ட மக்கள் நலப்பணிகள் நடைபெறாமல் பாதிக்கப்பட்டுள்ளன.

குடியாத்தம் நகரமன்றத்தை செயல்படவிடாமல் தடுத்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க. வேலூர் மேற்கு மாவட் ட‌ த்தின் சார்பில் நாளை (10‌ஆ‌ம ் தே‌தி) குடியாத்தம் நகரமன்ற அலுவலகம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எ‌ன்ற ு ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

Show comments