Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 1,606 பேருக்கு முதலமைச்ச‌ர் பதக்க‌ம்!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2008 (16:27 IST)
காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 1,606 பேருக்கு முதலமைச்ச‌ர் பதக்க‌ம் பொ‌ங்க‌ல் அ‌ன்று வழ‌ங்க‌ப்படு‌கிறது எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது கு‌றி‌த்து த‌‌மிழக அரசு வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை ஆகியவற்றில் ‌சிற‌ப்பான வகையில் பணிபுரிபவர்களுக்கு ஆண்டுதோறும், “தமி‌ழ்நாடு முதலமைச்சரின் பதக்கம ் ” வழங்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டின் பொங்கல் திருநாளையொட்டி, காவல்துறையில் சிறப்பாகப் பணிபுரிந்துள்ள காவலர்கள், தலைமைக் காவலர்கள் 1500 பேருக்கு, “தமி‌ழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம ் ” வழங்கிடவும்;

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்துள்ள ஓட்டுநர், தீயணைப்போர், தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர் 80 பேருக்கு, “தமி‌ழ்நாடு முதலமைச்சரின் தீயணைப்புத்துறை பதக்கம ் ” வழங்கிடவும்; சிறைத்துறையில் சிறப்பாகப் பணிபுரிந்துள்ள முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் 20 பேருக்கு, “தமி‌ழ்நாடு முதலமைச்சரின் சிறைத்துறைச் சிறப்புப் பணி பதக்கம ் ” வழங்கிடவும் முதலமைச்சர் கருணா‌நிதி ஆணையிட்டுள்ளார்.

இப்பதக்கங்கள், மாவட்ட அளவில் பின்னர் நிகழும் விழாக்களில் உரியவர்களுக்கு வழங்கப்படும். இவ்விருது பெறும் ஒவ்வொருவருக்கும் அவரவர் பதவித் தரத்திற்கேற்ப மாதம் 40 ரூபா‌ய் மற்றும் மாதம் 50 ரூபாய் என 1.2.2008 முதல் சிறப்புப் படியாக வழங்கப்படும். மேலும், காவல்துறையில் தொழில் நுட்பப் பிரிவு, காவல் படப்பிடிப்புப் பிரிவு, நா‌ய்ப்படைப் பிரிவு ஆகிய பிரிவுகள் ஒவ்வொன்றிலும் சிறப்பாகப் பணிபுரியும் இருவர் வீதம் மொத்தம் 6 பேருக்கு, “தமி‌ழ்நாடு முதலமைச்சரின் காவல் தொழில்நுட்பச் சிறப்புப்பணிப் பதக்கம ் ” வழங்கிடவும் முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார்.

இப்பதக்கம் பின்னர் நடைபெற உள்ள காவல்துறை விழாவில், முதலமைச்சர் கருணா‌‌நி‌தியா‌ல் வழங்கப்படும். இப்பதக்கங்கள் பெறுவோரின் பதவித் தரத்திற்கேற்ப 2,000 ரூபா‌ய் மற்றும் 3,000 ரூபா‌ய் என ஒருமுறை வழங்கும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். முதலமைச்ச‌ரி‌ன் இந்த ஆணையின் மூலம் மொத்தம் 1,606 பேர் தமி‌ழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களையும், சிறப்புப் படிகளையும் பெறு‌கி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments