Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!

Webdunia
சனி, 5 ஜனவரி 2008 (15:25 IST)
''‌ திருவ‌ண்ணாமல ை மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள தொட‌க் க வேளா‌‌ண்ம ை கூ‌ட்டுறவ ு வ‌ங்‌கிக‌ளி‌ல ் ‌ விவசா‌யிகளு‌க்க ு ‌ ப‌யி‌ர்‌க்கட‌ன ் வழ‌ங்க‌க ் கோ‌ர ி அ.இ.அ.‌‌ த ி. ம ு.க. சா‌ர்‌பி‌ல ் ஜனவ‌ர ி 7 ஆ‌ம ் தே‌த ி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நடைபெறு‌‌ம ்'' எ‌ன்ற ு அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன ் பொது‌ச ் செயலாள‌ர ் ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு அ.இ. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அறிக்கையில ், தி.மு.க. அரசு பதவியேற்றது முதல், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்குப் போதுமான அளவு பயிர்க் கடன் வழங்கப்படுவதில்லை என்றும், கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகைகள் முதிர்வு பெற்றிருந்தும் அவற்றை டெபாசிட்தாரர்களுக்கு திருப்பித் தருவதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது.

மேலும், இம்மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு அதிக அளவில் அரிசி கடத்தப்படுவதாகவும், இச்செயல் இம்மாவட்ட அமைச்சரின் ஆசியோடு நடைபெறுவதாகவும் பொது மக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

தி.மு.க. அரசு, விவசாயிகளுக்குப் போதிய அளவு பயிர்க் கடன் வழங்க வலியுறுத்தியும், கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள டெபாசிட் தொகைகளை முதிர்வடையும் காலத்தில் தாமதம் இன்றி திரும்பித் தர வலியுறுத்தியும், திருவண்ணாமலை மாவட்டத்தில் அரிசி கடத்தல் நடைபெறுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ஜனவ‌ர ி 7 ஆ‌ம ் தேதி காலை 10 மணி அளவில், திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்ற ு ஜெயல‌லித ா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments