Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகை: 3.5 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலை!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (10:49 IST)
பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.250 கோடி செலவில் மூ‌ன்றரை கோடி ஏழைகளுக்கு இலவச வேட்ட ி, சேலை வழங்க‌ப ் படு‌கிறத ு. இத‌ன ் ‌ தி‌ட்ட‌த்த ை முதலமைச்சர் கருணாநிதி நேற்று சென்னையில் துவ‌க்‌க ி வைத்தார்.

பொங்கல் பண்டிகையொட்டி தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு இலவச வேட்ட ி, சேலை வழங்கும் திட்டத்தின் துவ‌க் க விழா சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நே‌ற்ற ு நடைபெற்றது. முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு ஏழைகளுக்கு இலவச வேட்டி-சேலைகளை வழங்கினார்.

விழாவில் முத‌ல்வ‌ர ் கருணாநிதி பேசுகை‌யி‌ல ், கடந்த ஆண்டுகளில் 2 கோடி அளவுக்கு எண்ணிக்கையுள்ள வேட்ட ி, சேலைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 65 லட்சம் பாலிகாட் சேலைகளும், ஒரு கோடியே 65 லட்சம் பாலிகாட் வேட்டிகளும் என்ற அளவில் மொத்தமாக 3 கோடியே 30 லட்சம் என்ற அளவுக்கு எண்ணிக்கையுள்ளவை இலவசமாக வழங்கப்படுகின்ற ன. இதற்கு அரசின் சார்பில் செலவழிக்கப்படுகிற தொகை 250 கோடி ரூபாய ்.

கைத்தறி ஆடைகள், ஏழை எளியவர்களாக இருக்கின்ற- வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கின்ற மக்களுக்கு வழங்கும்போது, அது சேலைகளாக அல்லது வேட்டிகளாக அமையும்போது அவைகளை நல்ல மில் துணிகளாகக்கூட எடுத்துவிடலாம். கொடுத்துவிடலாம். அந்த துணிகளை வாங்கிக்கொடுக்கும்போது அந்த துணிகளை விற்பவர்கள் அந்த வேட்டியை சேலையை தருகின்றவர்கள் நெசவாளர்களாக இருந்தால் அவர்களின் பசியும் போக்கப்படும்.

சிலர் கூட அறிக்கை விட்டிருக்கிறார்கள்- டி.வி. கொடுக்கிறார்கள், அதைக் கொடுக்க வேண்டுமா என்று கேட்டு விட்டு டி.வி. கொடுக்காதே, டி.வி.க்கு செலவழிக்கின்ற பணத்தை வெள்ள நிவாரணத்திற்கு செலவழி என்றெல்லாம் கூட யோசனை சொல்கிறார்கள். வெள்ள நிவாரணத்திற்கு பணம் இல்லாவிட்டால் நான் டி.வி. கொடுக்கமாட்டேன். டி.வி.யை நிறுத்திவிட்டுத் தான் வெள்ள நிவாரணத்தைக் கவனிப்பேன். நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். கவலைப்படாதீர்கள். உங்கள் ஆசியால் (?) அம்மையாரே, எங்களிடம் வெள்ள நிவாரணத்திற்கும் பணம் இருக்கிறது. டி.வி. வாங்கிக் கொடுக்கவும் பணம் இருக்கிறது. இதற்காக யாரும் கவலைப்படவேண்டாம். நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம் என்று அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன் எ‌ன்ற ு முத‌ல்வ‌ர ் கருணாந‌ி‌த ி பே‌சினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments