Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரதம‌ரி‌ன் இல‌ங்கை‌ப் பயண‌த்தை எ‌தி‌ர்‌த்து ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ‌கி.‌வீரம‌ணி அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2007 (17:34 IST)
இல‌ங்கை‌யி‌ன ் சுத‌ந்‌திர‌தி ன ‌ விழா‌வி‌ல ் ‌ சிற‌ப்ப ு ‌ விரு‌ந்‌தினராக‌‌ப ் ப‌ங்கே‌ற்குமாற ு அ‌ந்நா‌ட்ட ு அரச ு ‌ விடு‌த்து‌ள் ள அழை‌ப்ப ை ஏ‌ற்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் இல‌ங்கை‌க்கு‌ச ் செ‌ல்ல‌க ் கூடாத ு எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம ் நட‌த்த‌ப ் போவதா க ‌ திரா‌விட‌ர ் கழக‌த ் தலைவ‌ர ் ‌ க ி.‌ வீரம‌ண ி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர் களிடம் அவர் கூறுகையில், " பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை சென்றால் பல்வேறு ஒப்பந்தங்கள் ஏற்படும். இலங்கைக்கு இந்தியா உதவும் நிலை ஏற்படும். அது தமிழர்களுக்கு விரோதமான நிலையை ஏற்படுத்தும்" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், "இலங்கையில் தமிழர்கள் உரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்து ஜனநாயக முறையில் தொடங்கிய போராட்டம், வேறு வழியில்லாததால் ஆயுதம் தாங்கிய போராட்டமாக மாறி உள்ளது. இதற்கு அர‌சிய‌‌ல் தீர்வு காண எந்த முய‌ற்‌சியு‌ம் எடு‌க்காத இலங்கை அரசுக்கு இந்தியா மறைமுகமாக ராணுவ உதவிகளை செய்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வருகிற பிப்ரவரி மாதம் 4-ஆ‌ம் தேதி இலங்கை‌யி‌‌‌‌ன் சுதந்திர தின விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் முக்கிய விருந்தினராக கலந்து கொள்கிறார் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு இன்னும் இதை உறுதி செய்யவில்லை.

பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை அரசின் அழைப்பை ஏற்கக் கூடாது. இலங்கை பயணத்தை ரத்து செய்ய வேண்டும். இதை வற்புறுத்தி 31-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை மெமோரியல் ஹால் முன்பு திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஒத்த கருத்துள்ளவர்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும்.

முத‌ல்வர் கருணாநிதி, பிரதமரிடம் இலங்கை செல்லும் அவரது திட்டத்தை கைவிடுமாறு வற்புறுத்த வேண்டும். எந்த நிலையிலும் பிரதமர் இலங்கை சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கக்கூடாது" எ‌ன்றா‌ர் கி.வீரமணி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments