Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவு‌ம்: ராமதாஸ்!

Webdunia
சனி, 22 டிசம்பர் 2007 (10:25 IST)
'' தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும ்'' என்று மத்திய அரசுக்கு மரு‌த்துவ‌ர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பா.ம.க. சார்பில் நடைபெ‌ற்ற கிறிஸ்துமஸ் விழா அத‌ன் நிறுவன தலைவர் மரு‌‌த்துவ‌ர் ராமதாஸ் பேசுகை‌யி‌ல், ஏசுவின் ராஜியத்தில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை என்று கிறிஸ்தவ மதம் போதிக்கிறது. ஆனால் ஏழை பணக்காரன் என்ற நிலையை இன்னும் பார்க்கிறோம். ஏசுநாதரை பின்பற்றுபவர்கள் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தில் இருக்கிறார்கள். தலித்துகளாக இருந்தவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிய பின்பு, அவர்களுக்கு இருக்கின்ற சலுகைகள், இதுவரை மறுக்கப்படுகிறது என்று இங்கு பேசியவர்கள் கோடிட்டு காட்டினார்கள்.

மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்கள் ஒரு கோடி பேர் உள்ளனர். இந்த ஒரு கோடி பேரை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்ப்பதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் வரப்போவது இல்லை. இதற்காக அரசியல் சட்டத்தை திருத்தி ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்கவேண்டும். இதைதான் நீதிபதி ரெங்கநாத்மிஸ்ரா அறிக்கையில் கூறியுள்ளார். ஆனால் இதுவரை அவரது அறிக்கை வெளியிடப்படவில்லை. அடுத்த பாராளுமன்ற நிதிநிலை அறிக்கை தொடர் கூட்டத்திலேயே தாக்கல்செய்து விவாதிக்கவேண்டும்.

மக்கள் தொகை அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு 10 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். இந்த ஆண்டு புத்தாண்டு செய்தியாக மத்திய அரசு தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலுக்கான அட்டவணையில் சேர்க்கவேண்டும். இதற்கான உத்தரவை மத்திய அரசு இந்த ஆண்டு பிறப்பிக்கவேண்டும். அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம் எ‌ன்று ராமதா‌‌ஸ் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments