Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து எரிப்பு வழக்கு: அ.இ.அ.தி.மு.க.வினர் 3 பேருக்கும் ஜனவ‌ரி 10 ஆ‌ம் தேதி தூக்கு!

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2007 (17:19 IST)
த‌ர்மபு‌ரி பேரு‌ந்து எ‌ரி‌ப்பு வழ‌க்‌கி‌ல் மு‌க்‌கிய கு‌ற்றவா‌ளியான அ.இ.அ.‌தி.மு.க.‌வி‌ன‌ர் 3 பேரு‌க்கும் ஜனவ‌ரி 10ஆ‌ம் தே‌தி தூ‌க்கு‌த்த‌ண்டனை ‌நிறைவே‌ற்ற‌ப்பட வே‌ண்டு‌‌மென்று சேல‌ம் முதலாவது கூடுத‌ல் அ‌ம‌ர்வு ‌‌நீ‌திம‌ன்ற‌‌ நீ‌‌திப‌தி மாண‌ி‌க்க‌ம் உ‌‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

கடந் த பிப்ரவர ி 2000 ஆம ் ஆண்டு ஜெயலலிதாவிற்க ு கொடைக்கானல ் பிளசன்ட ் ஸ்டே ஓட்டல் வழக்கில ் தண்டனை வழ‌ங்‌கியத‌ற்கு எதிர்ப்ப ு தெரிவி‌‌‌த்து த‌மிழக‌ம் முழுவது‌ம் அ.இ. அ. த ி. ம ு.க. வினர ் போராட்டம ் நடத்தினர ். தர்மபுர ி மாவட்டம ் இலக்கியம்பட்டி‌யி‌ல் நட‌ந்த ம‌றிய‌ல் வ‌ன்முறையானது. ‌அ‌ப்போது வழியா க வந் த கோவ ை வேளாண்ம ை பல்கலைக்கழ க மாணவிகளின் பேரு‌ந்து‌க்கு அ.இ. அ. த ி. ம ு.க. வினர ் த ீ வைத்தனர ். இதில் மாண‌வி‌க‌ள் கோகிலவாண ி, ஹேமலத ா, காயத்ர ி ஆகியோ‌ர் உயிரோட ு எரி‌த்து‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

இது தொடர்பாக 31 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது அவ‌ர்க‌ள் மீது பல்வேறு பிரிவுகளி‌ன் ‌‌கீ‌ழ் வழக்கு பதிவு செ‌ய்தன‌ர். இந்த வழக்கு விசாரணை நடந்தபோதே ஒருவர் இறந்து வ‌ி‌ட்டா‌ர். 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 28 பேர் மீதான வழ‌க்கு சேல‌ம் முதலாவது கூடுத‌ல் அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நட‌ந்து வ‌ந்தது. இந்த வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர்கள் நெடு ( எ) நெடுஞ்செழியன், மாது ( எ) ரவிச்சந்திரன், முனியப்பன் ஆகியோரு‌க்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஏனைய 25 பேருக்கு 7 ஆண்டுகள் 3 மாதம் வரை தண்டனை வழ‌ங்க‌ப்பட்டது.

இ‌ந்த தண்டனையை எதிர்த்து 28 பேரு‌ம் சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அப்பீல் செய்தன‌ர். மனுவை விசாரித்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம ், 3 பே‌ரு‌க்கு‌ம் ‌‌கீ‌ழ் ‌நீ‌‌திம‌ன்ற‌ம் வ‌ி‌தி‌‌த்த தூக்கு தண்டனையை உறுதி செய்தது. மற்ற 25 பேரும் தண்டனையை ஏகபோகமாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடு‌த்து 28 பேரு‌ம் கோவை சிறையில் அடைக்கப்பட்டன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல ், சேலம் முதலாவது கூடுதல் அம‌ர்வு ‌‌நீ‌திம‌ன்ற நீதிபதி மாணிக்கம் ஒரு வாரண்டை கோவை சிறைக்கு அனுப்பி உள்ளார். அதில ், தர்மபுரி பேரு‌ந்து எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரையும் ஜனவரி 10ஆ‌ம் தேதி காலை 6 மணிக்குள் கோவை சிறையில் தூக்கிலிடுமாறு கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி. வட்டார‌ம் உறுதி செய்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments