Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை‌‌க்கு ப‌லியான குடும்பங்களுக்கு நிதி உதவி: கருணாநிதி!

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2007 (10:25 IST)
'' தமிழகத்தில் பெ‌ய்த கனமழ ையா‌ல் உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும ்'' என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில ், தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழ ையா‌ல் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த செய்திகள் கேட்டு, புதுடெல்லியில் நடைபெறும் முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள தமிழக முதலமைச்சர் கருணாநிதி மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். மழை காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக பார்வையிட்டு, உரிய நிவாரணப் பணிகளையும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு, அமைச்சர்களுக்கும், அனைத்து மாவட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ ளுக்கும் உத்தரவிட்டுள்ளார். நிவாரண நடவடிக்கைகளை உரிய நேரத்தில் விரைந்து செய்து முடிக்கவும் முதலமைச்சர் கருணாநிதி அறிவுரை வழங்கியுள்ளார் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments