Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரவள்ளி கிழங்கு டன்னு‌க்கு ரூ.4,000 வேண்டும்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2007 (14:23 IST)
விவசாயிகள் உற்பத்தி செய்யும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்றுக்கு ரூபா‌ய் நான்காயிரம் விலை வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க செயல் வீரர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் மாநில தலைவர் சிவசாமி தலைமையில் ராசிபுரத்தில் நடந்தது. கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:

விவசாயிகள் உற்பத்தி செய்யும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.நான்காயிரம் நிர்ணயம் செய்யவேண்டும்.

நெல்லுக்கு சம்பா ரகம் குவிண்டால் ரூ.1500, குருவை ரகம் குவிண்டால் ரூ.1000

மக்கா சோளம் ரூ.1000

பருத்தி நீண்ட இலை ரகம் குவிண்டால் ரூ.4500, குறுகிய இலை குவிண்டால் ரூ.3500, தேங்காய் ஒரு கிலோ ரூ.15 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

நிலக்கடலைக்கு ஒரு ஏக்கருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும்.

மரவள்ளி கிழங்குக்கு கூட்டுறவு ஆலைகள் ஏற்படுத்த வேண்டும். மரவள்ளி ஜவ்வரிசியை பள்ளிகளில் மதிய உணவிலும், மத்திய அரசின் தேசிய தோட்டக்கலை மிஷனில் சேர்த்து கொள்ள வேண்டும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்தொகை அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments