Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குவிண்டால் நெல்லுக்கு ரூ.1000: மத்திய அரசை கருணா‌நி‌தி க‌‌ட்டாய‌ப்படு‌த்த வேண்டும்- ஜெயலலிதா!

Webdunia
புதன், 5 டிசம்பர் 2007 (15:30 IST)
கு‌வி‌ண்டா‌ல ் நெ‌ல்லு‌‌க்க ு ஆ‌யிர‌ம ் ரூபா‌ய ் வ‌ழ‌ங் க ம‌த்‌தி ய அரச ை கருணா‌நி‌த ி க‌‌ட்டாய‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம ் எ‌ன்று அ.இ.அ. த‌ ி. ம ு.க. பொது‌ச ் செயலாள‌ர ் ஜெயல‌லித ா வ‌லியுறு‌த்த‌ியு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில ், நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழை பெய்த தன் விளைவாக விவசாயிகள் மகிழ்ச்சியோடு வேளாண் பணிகளை துவக்கினாலும், பேக்டம்பாஸ், டி.ஏ.பி. போன்ற உரங்கள் கிடைக்காததன் காரணமாக அல்லல்பட்டு வருகின்றனர். உரங்கள் தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்ய வே‌ண்டிய பொறு‌ப்பு மாநில அரசிற்கு உண்டு. அதையும் மீறி தட்டுப்பாடு ஏற்படுவதாக தெரிந்தால் மத்திய அரசின் இருப்பில் இருந்து தமிழ் நாட்டிற்குத் தேவையான உரங்களை கேட்டுப் பெறவேண்டும்.

பயிர்க் கடனும் நிறுத்தப்பட்டு, உரங்கள் வழங்குவதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக விவசாயிகள் பெரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கால் விவசாயப் பணிகளை விவசாயிகளால் முழுமையாக செய்ய முடிய வில்லை. இதன‌ா‌ல் விவசாயிகள், நுகர்வோர்கள் என இரு தரப்பினருமே பாதிக்கப்படுவர்.

கருணாநிதி, விவசாயிகளுக்கு உரங்கள் தடங்கலின்றி கிடைக்கவும், நெல்லுக்கு ஆதரவு விலையாக ஆயிரம் ரூபாய் என உயர்த்தித் தரக் கோரியும் மத்திய அரசை கட்டாயப்படுத்த வேண்டும். பயிர்க் கடன்களை உடனடியாக வழங்கவும், அனைவருக்கும் தரமான ரேஷன் அரிசி வழங்கவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயல‌லிதா வலியுறுத்‌தியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments