Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலு‌க்கு 3 கோடி இலவச வேட்டி, சேலை: தமிழக அரசு வழ‌ங்கு‌கிறது!

Webdunia
சனி, 1 டிசம்பர் 2007 (13:51 IST)
பொங்கல் பண்டிகையையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு இலவச வேட்டி, சேலை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 3 கோடியே 28 லட்சம் பேருக்கு இலவச வேட்ட ி, சேலை வழங்கப்பட உள்ளது.

இத்தகவலை குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் நடந்த அரசு விழாவில் தமிழக கைத்தறி, கைத்தறி திறன், துணிநூல ், கதர்துறை அரசு செயலாளர் விஸ்வநாத் ஷெகாவ்கர் தெரிவித்தார்.

அவர் மேலு‌ம் கூறுகை‌யி‌ல ், தமிழகத்தில் இந்த ஆண்டு இலவச வேட்டி, சேலை 3 கோடியே 28 லட்சம் பேருக்கு ரூ.256 கோடி மதிப்பில் வழங்கப்பட உள்ளது. இலவச சீருடை திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ-மாணவிகள் 60 லட்சம் பேருக்கு ரூ.55 கோடி செலவில் 1 கோடியே 60 லட்சம் மீட்டர் துணி நெய்வதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எ‌ன்று வ‌ி‌ஸ்வநா‌த் ஷெகா‌வ்க‌ர் கூ‌றினா‌ர்.

இலவச வேட்டி-சேலை குறித்து கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா கூறுகை‌யி‌ல ், பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு ஒரு கோடியே 64 லட்சம் வேட்டிகளும், ஒரு கோடியே 64 லட்சம் சேலைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

பொங்கலுக்கு முன்பாக அனைத்து வேட்டி சேலைகளும் வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இந்த மாத இறுதிக்குள் அனைத்து இடங்களுக்கும் வேட்டி- சேலைகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ஆ‌ம் தேதி முதல் ஏழைகளுக்கு இலசவ வேட்டி சேலை வழங்கும் பணி தொடங்கும். பொங்கலுக்கு முன்னதாக அனைவருக்கும் வழங்கப்பட்டு‌விடு‌ம் எ‌ன்று அமை‌ச்ச‌ர் ராஜா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments