Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் புதிய திட்டம்: நரேஷ் குப்தா துவ‌க்‌கி வைத்தார்!

Webdunia
சனி, 1 டிசம்பர் 2007 (11:16 IST)
படிக்கும் கல்லூரிகளுக்கே சென்று மாணவ-மாணவிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் புதிய திட்டத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா சென்னையில் நேற்று துவ‌க்‌கி வைத்தார்.

சென்னை நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி.வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் செயல்பட்டு வரும் ய ூத் பார் டெமாகிரசி' என்ற மாணவிகள் அமைப்பு சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவ-மாணவிகளை வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்தை தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தொடங்கி வைத்தார்.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 42 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள ், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை நரேஷ் குப்தா வழங்கி தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வழங்கி பேசுகை‌யி‌ல், மாணவ-மாணவிகள் இங்கே கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தங்கள் கல்லூரி முதல்வரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அவற்றை மாநகராட்சி தேர்தல் அதிகாரி ஒருவர் நேரடியாக வந்து பெற்றுக்கொள்வார். அதைத்தொடர்ந்து ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து விசாரணையை மேற்கொள்வார்கள்.

தமிழ்நாட்டில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி 97 வ‌ிழு‌க்காடு முட ி‌ந்த ுவிட்டது. சென்னையில் 87 ‌ விழு‌க்காடு பணிதான் முடிவடைந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் 90 ‌ விழு‌க்காடு பணி முடிவடைந்து விடும். 1.1.2008 அன்று 18 வயது நிரம்பும் எவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகராட்சியில் இதற்கென ஹெல்ப்லைன் வசதி செய்யப்பட்டு உள்ளது எ‌ன்று நரேஷ் குப்தா கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments