Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செய‌ல்ப‌ட்டா‌ல் நடவடிக்கை: காவ‌ல்துறை தலைமை இ‌ய‌க்குன‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (09:34 IST)
'' தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம், போராட்டங்கள் செ‌ய்பவ‌ர்க‌ள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும ்'' என்று காவ‌ல்துறை தலைமை இய‌‌க்குன‌ர் ( டி.ஜி.பி.) ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக காவ‌ல்துறை தலைமை இ‌ய‌க்குன‌ர் ராஜேந்திரன் நே‌ற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில ், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், உள்ளிருப்பு கூட்டங்கள், பட்டிமன்றங்கள், இரங்கல் கூட்டங்கள் நடத்துபவர்கள ், ஆர்ப்பாட்டங்கள், உருவ பொம்மைகள் எரித்தல், சாலை மறியல் செய்தல் போன்ற போராட்டங்களில் ஈடுபடும் அமைப்புகள ், தனி நபர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (1967) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தல், சுவர் விளம்பரங்கள் செய்தல், கண்காட்சி நடத்துதல் ம‌ற்று‌ம் எவ்வித ஆதரவு செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது. மீறி நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்படி சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் அச்சிடும் அச்சக உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது இடங்களில் கட்சித் தலைவர்கள ், முக்கிய நபர்களின் உருவ பொம்மைகளை எரிப்பது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் ராஜே‌ந்‌திர‌ன் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments