Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை குண்டுவெடிப்பு கை‌திக‌ள் 13 பேர் உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்தி‌ல் ‌பிணைய விடுதலை மனு!

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2007 (16:20 IST)
கோவை கு‌ண்டுவெடி‌ப்பு வழ‌க்‌கி‌ல் த‌ண்டனை பெ‌ற்ற 13 பே‌ர் ‌பிணைய விடுதலைக் கே‌ட்டு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளன‌ர்.

1998 ஆம் ஆண்டு கோ‌வை‌யி‌ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இது தொடர்பாக வழ‌க்கு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இ‌ந்த வழ‌க்‌கி‌ல் கடந்த ஆகஸ்‌‌ட் மாதத்தில் இருந்து பல க‌ட்ட‌ங்களாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

இ‌தி‌ல் கேரளா ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் அப்துல்நாசர் மதானி உள்பட சிலர் விடுதலை செய்யப்பட்டனர். அல்-உம்மா இயக்கத் தலைவர் பாஷா உள்பட 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அபுதாகீர், அப்பாஸ், இப்ராகிம் அப்துல் ரகுமான், அஷ்ரப், சாகுல் அமீது, முகமது ரபீக், அப்துல் வகாப், அப்துல் கரீம் அப்துல் பாரூக், சர்தாஜ், ஜாகீர் பக்ரூதீன் அலி அகமது ஆகிய 13 பேருக்கு 13 ஆண்டு ‌சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த 13 பேரும் தங்களை ‌பிணை‌யி‌ல் விடுதலை செய்ய கோ‌ரி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்தி‌ல் மனுதாக்கல் செய்துள்ளனர். அ‌தி‌ல ், தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்க வேண்டும். 10 ஆண்டுகள் நாங்கள் ஜெயிலில் இருந்து விட்டோம் என்று கூறியுள்ளனர்.

இந்த மனு நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பன் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அ‌ப்போது 2 வாரத்தில் பதில் அனுப்பு மாறு கோவை சி.பி.சி.ஐ.டி. காவலரு‌க்கு தா‌க்‌கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

Show comments