Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச ‌வீ‌ட்டுமனை வருமான வர‌ம்பு ‌நீ‌க்க‌ம்: கருணா‌நி‌தி!

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2007 (09:26 IST)
இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக வருமான உச்சவரம்பை முற்றிலும் நீக்கி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில ், இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் பணியில் ஆ‌ட்‌சிய‌ர்க‌ள் எந்த அளவிற்கு பணியாற்றினார்கள் என்பதை ஆய்வு செய்வதற்கான கூட்டம் சென்னை கோட்டையில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நேற்று நடைபெற்றத ு. இ‌த ில் வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தலைமைச்செயலாளர், நிதித்துறை செயலாளர், வளர்ச்சி ஆணையர், வருவாய்த்துறை செயலாளர், நில நிர்வாக ஆணையர ், திருச்சி, நாகை மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர்க‌ள ், கோவை, விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

3 லட்சம் வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கவேண்டுமென்று குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில், 10.11.2007 வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 287 வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த பணியினை முழு வேகத்தோடு முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதி அறிவுரை வழங்கினார்.

இந்த கூட்டத்த ி‌ல் வெளிய ிட‌ப்ப‌ட்ட புதிய அறிவிப்ப ுகளான இலவசமாக வீட்டுமனை பெற கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் ரூ.30 ஆயிரம் என்றும், நகர்ப்புறங்களில் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரம் என்றும், இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டிருந்த வருமான வரம்பை முழுவதுமாக நீக்குவதென்று முடிவு செய்யப்பட்டது. இனி இலவசமாக வீட்டுமனை பட்டாக்கள் வழங்க எந்தவிதமான வருமான உச்சவரம்பும் கிடையாது.

கிராமப்புறங்களில் இதுவரை 3 சென்ட் வரையிலும், நகராட்சி பகுதிகளில் ஒன்றரை சென்ட் வரையிலும், மாநகராட்சி பகுதிகளில் ஒரு சென்ட் வரையிலும் வருமான வரம்புக்குட்பட்டு, இலவசமாக வீட்டு மனைப்பட்டாக்கள் வரைமுறை செய்து வழங்கப்பட்டதற்கு மாறாக இனிமேல் கிராமப்புறங்களில் 4 சென்ட் வரையிலும், நகராட்சி பகுதிகளில் இரண்டரை சென்ட் வரையிலும், மாநகராட்சி பகுதிகளில் 2 சென்ட் வரையிலும் இலவசமாக வீட்டுமனைப் பட்டாக்கள் வருமான உச்சவரம்பு எதுவுமின்றி வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் ஏற்கனவே வீட்டுமனை பட்டாக்களை பெற மனைக்கிரயம் செலுத்தியவர்களுக்கு, அவர்கள் செலுத்திய தொகை அவர்களுக்கே திரும்ப வழங்கப்படும் எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments