Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.மு.க.வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது : மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2007 (11:16 IST)
தி.மு.க. வை எந்த சக்‌தியாலும் அழிக்க முடியாது என ஈரோட்டில் நடந்த தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஈரோடு மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. நெல்லையில் நடக்கும் மாநில மாநாட்டுக்கு ஈரோடு மாவட்டத்தின் சார்பில், ரூ.30 லட்சத்தை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா வழங்கினார்.

‌ விழா‌வி‌ல், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைதாங்கி பேசியதாவது: சேலம், காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், நாமக்கல், கரூரில் இளைஞரணி கூட்டம் நடந்துள்ளது.

நாளை (இன்று) கோவையிலும், மறுநாள் திருவள்ளூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டையிலு‌ம் கூட்டம் நடக்கிறது. டிச.15, 16 தேதியில் நெல்லையில் நடக்கும் மாநில இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சார கூட்டம் நடத்த வேண்டும்.

நிதி வழங்குவதில் ஈரோடு மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. அதேபோல் எழுச்சியிலும் முதலிடத்தில் உள்ளது.

புதிய கட்சியை துவக்குபவர்கள் நாங்கள் தான் முதல்வர் என கூறுகின்றனர். முதல்வர் பதவி அவர்களுக்காக காத்திருப்பது போலவும், நமது கை பூப்பறிப்பது போலவும் நினைத்து கட்சியை துவக்குகின்றனர். தி.மு.க., பல முறை ஆட்சிக்கு வந்துள்ளது. சில முறை ஆட்சியில் இல்லாமலும் இருந்துள்ளது. தி.மு.க., வில் துணை அமைப்பாக இளைஞரணி உள்ளது. மக்களுக்கு பல சேவையை செய்து வருகிறது. தி.மு.க., கட்சி விதிப்படி இளைஞரணி இணை அமைப்பாக இருக்க கூடாது. துணை அமைப்பாக இருக்க வேண்டும் என முடிவு செய்து மதுரையில் துவங்கப்பட்டது. தி.மு.க. வை எந்த சக்தியாலும் அழிக்கமுடியாது.

நம்மை தேடி பதவி வரவேண்டும். நாம் பதவியை தேடி போகக்கூடாது. சில காலத்துக்கு பின் பதவி போகும். இளைஞரணி பதவியில் முன்னாள், இன்னாள் கிடையாது. முதல்வர் கருணாநிதி, இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என எழுதி வருகிறார். நெல்லையில் டிச.15,16 தேதிகளில் இளைஞரணி மாநில மாநாடு நடக்கிறது. 16ம் தேதி மிகப்பெரிய அணிவகுப்பு நடக்கிறது எ‌ன்று அவர் பேசினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments