Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபா‌‌ய் ‌விப‌த்‌தி‌ல் ப‌லியான த‌மிழ‌ர்க‌ளி‌ன் உற‌வின‌ர்க‌ள் சோக‌ம்!

Webdunia
சனி, 10 நவம்பர் 2007 (12:45 IST)
துபா‌யி‌ல் பால‌ம் இடி‌ந்த ‌விப‌த்‌தி‌ல் ‌சி‌‌க்‌கி 5 த‌மிழ‌ர்களு‌ம் இற‌ந்து‌ள்ளன‌ர். இவ‌ர்க‌ளி‌ன் சொ‌ந்த ஊ‌ர்க‌ளி‌ல் உற‌வின‌ர்க‌ள் கவலையுட‌ன் க‌ண்‌ணீ‌ர் ம‌ல்க உட‌ல்க‌ளி‌ன் வருகை‌க்காக கா‌த்‌திரு‌க்‌கி‌ன்றன‌ர்.

துபாயில் ஜுமிரியா மதினாமால் பகுதியில் உள்ள சுபோக் சாலையில் பெரியபாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் இந்தியர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

தீபாவளி அன்று பணி நடந்துகொண்டிருந்தபோது பால‌த்‌தி‌ன் ஒருபகு‌தி இடிந்து விழுந்தது. அப்போது கான்கிரீட் இடிபாடுகளுக்குள் சிக்கி இந்தியர்கள் 7 பேர் பலியானார்கள். இவர்களில் 5 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

இவர்களில் ஒருவர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைபட்டியை சேர்ந்த ஷாஜகான் (வயது 38) என தெரியவந்தது. இவருக்கு மனைவி, 3 ஆண் குழந்தைகள் உண்டு. இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் துபாய் சென்று உள்ளார்.

அவ‌ரி‌ன் சகோதர‌ர்க‌ள் யூசுப், அஷிப்கான் ஆகியோர் க‌ண்‌ணீ‌ர் ம‌ல்க கூறுகை‌யி‌ல ், '' வறுமையில் வாடிய ஷாஜகான் ஆயிரக்கணக்கில் பணம் கடன் வாங்கி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு துபாய்க்கு சென்றார். மாதம் ஒருமுறையாவது அவ‌ர் எங்களுடன் பேசி விடுவா‌ர். ரம்ஜானு‌க்கு வருவதை எதிர்பார்த்து அவனது குழந்தைகள் காத்திருந்தனர். ஆனால் ஷாஜகான் வரவில்லை. அவ‌ர் இறந்த செய்தி எங்களுக்கு இடிவிழுந்தது போல் ஆகிவிட்டது. ஷாஜகானை இழந்து வாடும் அவரது குழந்தைகள் 3 பேருக்கு‌ம் அரசு உதவி செய்ய வேண்டும ்'' எ‌ன்றன‌ர்.

பலியானவர்களில் இன்னொருவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டியை சேர்ந்த கார்த்தி (21) ஆவார். தந்தை பெயர் தங்கம், தாய் மலர் இவருக்கு அண்ணன் ஜெயராமன், அக்காள் லட்சுமி ஆகியோர் உள்ளனர். காத்திக்கு திருமணம் ஆகவி‌ல்லை.

அவரது தாய் மலர் கண்ணீர் மல்க கூறுகை‌யி‌ல ்,'' எனது மகன் கார்த்தி பணம் சம்பாதித்து எங்களது குடும்பத்தை காப்பாற்றுவான் என கருதிதான் துபாய்க்கு அனுப்பினேன். எதிர்பார்த்தபடி பணமும் அனுப்பினான். அதன் மூலம் அவனுக்கு திருமண ஏற்பாடு செய்தோம். அதற்குள் பாலம் அவனை பலியாக்கி கொண்டதே அவனை இனி எப்போது பார்ப்பேன ்'' எ‌ன்றா‌ர்.

ஒரத்தநாட்டை சேர்ந்த காவரப்பட்டு ராமலிங்கம் மகன் மதியழகன ், மதுரை அருகே உள்ள குலமங்கலத்தை சேர்ந்த ஒருவரும ், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ஒருவரும் துபா‌ய் ‌விப‌த்‌தி‌ல் இற‌ந்து‌ள்ள‌னர்.

‌ விப‌த்‌தி‌ல் இற‌ந்தவ‌ர்க‌‌ளி‌ன் உடல்கள் இந்திய தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவை திங்கட்கிழமை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகி‌ன்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!