Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டார் வைகோ!

Webdunia
புதன், 7 நவம்பர் 2007 (16:46 IST)
பூ‌‌ விரு‌ந்த வல்‌லி பொடா ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ ஆஜரா‌கி தனது கடவுச் சீட்டை பெ‌ற்று‌க் கொ‌ண்டா‌ர்.

மதுரை மாவட்டம ், திருமங்கலத்தில் கட‌ந்த 2002ஆம் ஆண்டு நடந்த ம.திமு.க. பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பே‌சியதாக வைகோ உ‌ள்பட 9 பேர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். இந்த வழக்கு பூவிருந்தவல்லி பொடா சிறப்பு ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நட‌ந்து வரு‌கிறது.

இந்த வழக்கில் பிணைய விடுதலை கே‌‌ட்டு வைகோ தா‌க்க‌ல் செ‌ய்த மனுவை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌த ி, வைகோவின் கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற நிப‌ந்தனையின் பேரில் அவரு‌க்கு பிணைய விடுதலை வழங்‌‌கினா‌ர். இதை தொடர்ந்து கடவுச் சீட்டை வைகோ ‌‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் ஒப்படைத்தார்.

இந்த வழக்கு விசாரணை கடந்த அக்டோபர் 18ஆ‌ம் தேதி வ‌ந்தபோத ு, நவம்பர் 7ஆ‌ம் தேதிக்குள் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் வைகோ ஆஜராகி கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி கூறி இருந்தார்.

இதையடு‌த்து வைகோ இன்று பொடா சிறப்பு ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் நீதிபதி ஆவடி தியாகராஜன் மூர்த்தி முன்பு ஆஜராகி கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டார்.

‌ நீ‌திம‌ன்ற‌த்தை விட்டு வெளியே வந்த வைகோ செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல ், அய‌ல்நாடு செல்லஇருப்பதால் கடவுச் சீட்டை பெறுவதற்காக இன்று ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜரானேன். இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments