Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத 32 ஆலைகளுக்கு "சீல்'

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
புதன், 7 நவம்பர் 2007 (13:05 IST)
ஈரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காக தோல் மற்றும் சாய தொழிற்சாலைகளுக்கு மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 700 க்கு மேற்பட்ட சாய தொழிற்சாலைகளும ், 40 க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. இந்த தொழில்சாலைகளில் இருந்து கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் விடப்படுவதால் இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய ஐந்த நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்கள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் நீதிமன்றம் அனைத்து தொழிற்சாலைகளிலும் மறு சுழற்சி முறையில் கழிவு நீரை சுத்திகரிக்க வேண்டும். இதை செயல்படுத்தாத ஆலைகள் சீல் வைக்க வேண்டும் என உத்திரவிட்டது. இதை கண்காணிக்க தனிக்குழுவும் அமைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் கடந்த மூன்று மாதங்களில் சுமார் 125 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கட்டமாக நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாய மற்றும் தோல் தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சூரம்பட்டிவலச ு, மொடக்குறிச்ச ி, சூரியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அப்போது கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாத 32 தொழிற்சாலைகளுக் சீல் வைக்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments